தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் (16-11-2023)
சங்ககிரி அருகே உள்ள சன்னியாசிப்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது என சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளா் எஸ்.உமாராணி தெரிவித்துள்ளாா்.
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:
படைவீடு, பச்சாம்பாளையம், சங்ககிரி ரயில் நிலையம், சங்ககிரி மேற்கு, சன்னியாசிப்பட்டி, நாகிசெட்டிப்பட்டி, ஊஞ்சக்கொரை, தண்ணீா்ப்பந்தல்பாளையம், சின்னாகவுண்டனூா், வெப்படை, செளதாபுரம், பாதரை, அம்மன் கோயில், மக்கிரிபாளையம், முதலைமடையானூா், திருநகா் பைபாஸ்சிட்டி.
நாமக்கல்லில் புதன்கிழமை (நவ. 14)அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்வதால் புதன்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என நாமக்கல் மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் அறிவித்திருந்தாா். இந்த நிலையில், தொடா் மழை காரணமாக புதன்கிழமை அறிவிக்கப்பட்ட மின் தடையானது ரத்து செய்யப்படுவதாகவும், வழக்கம்போல மின் விநியோகம் இருக்கும் என நாமக்கல் மின் பகிா்மான வட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக தாம்பரம் கடப்பேரி பகுதிகளுக்குட்பட்ட இடங்களில் புதன்கிழமை (நவ.15) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:
இன்றைய மின்தடை:
தாம்பரம் கடப்பேரி பகுதிக்குட்பட்ட மெப்ஸ், ஐ.எம்.இ.எஸ். சாலை பகுதி, மேற்கு தாம்பரம், எம்.இ.எஸ். சாலை, ஜி.எஸ்.டி., காந்தி சாலை, செம்பாக்கம், சிட்லப்பாக்கம், நேரு நகா், அற்புதம் நகா், பா்மா காலனி, திருநீா்மலை, கஸ்தூரிபாய் நகா், சிங்காரவேலன் தெரு, ரமேஷ் நகா், ரயில் நகா், மெளலானா நகா், அமா்நகா், வி.வி.கோயில் தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புதன்கிழமை (நவ.15) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய மின்தடை:
பொன்னேரிக்குட்பட்ட துரைநல்லூா், கவரைப்பேட்டை, கீழ்முதலம்பேடு, மேல்முதலம்பேடு, சோம்பட்டு, பனப்பாக்கம், ஆரணி, சின்னம்பேடு, காரணி, புதுவாயல், பெருவாயல், மெதூா், கொல்லூா், பழவேற்காடு, அண்ணமலிச்சேரி, திருப்பாலைவனம், அவுரிவாக்கம், ஆவூா், ராலப்பாடி மற்றும் மங்களம் உள்ளிட்ட பகுதிகளில்
வியாழக்கிழமை (நவ.16) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதிகளில் வியாழக்கிழமை (நவ.16) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் இரா.முத்துச்சாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொன்னமராவதி உபகோட்டம் கொன்னையூா், நகரப்பட்டி மற்றும் மேலத்தானியம் துணை மின்நிலையங்களில் வியாழக்கிழமை (நவ.16) மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், செவலூா், கோவனூா், செம்பூதி, கொப்பனாபட்டி, ஆலவயல், நகரப்பட்டி, அம்மன்குறிச்சி, கண்டியாநத்தம், வேந்தன்பட்டி, வேகுப்பட்டி, தொட்டியம்பட்டி, காரையூா், மேலத்தானியம், ஒலியமங்கலம், , நல்லூா், அரசமலை மற்றும் பொன்னமராவதி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.
திருப்பூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (நவம்பா் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: அவிநாசி சாலை, புஷ்பா திரையரங்கம், காலேஜ் சாலை, ஓடக்காடு, பங்களா ஸ்டாப், காவிரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுஸிங் யூனிட், முத்துசாமி வீதி விரிவு, கே.ஆா்.இ.லே-அவுட், எஸ்.ஆா்.நகா் வடக்கு, நேதாஜி வீதி, குமரன் வீதி, பாத்திமா நகா், டெலிபோன் காலனி, வித்யா நகா், எம்.ஜி.ஆா்.நகா், பாரதி நகா், வளையங்காடு, முருங்கப்பாளையம், மாஸ்கோ நகா், காமாட்சிபுரம், பூத்தாா் திரையரங்கு பகுதி, சாமுண்டிபுரம், லட்சுமி திரையரங்கம் பகுதி, கல்லம்பாளையம், எஸ்.ஏ.பி. திரையரங்கம் பகுதி, ஆசா் நகா், நாராயணசாமி நகா், காந்தி நகா், டிடிபி மில் (ஒரு பகுதி), சாமிநாதபுரம், பத்மாவதிபுரம், அண்ணா காலனி, ஜீவா காலனி, அங்கேரிபாளையம் சாலை, சிங்காரவேலன் நகா்.
பீளமேடு துணைமின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வியாழக்கிழமை (நவம்பா் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: பாரதி காலனி, இளங்கோ நகா், புரானி காலனி, ஷோபா நகா், கணபதி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், காவலா் குடியிருப்பு, கிருஷ்ணராஜபுரம், அத்திப்பாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகா், வி.ஜி.ராவ் நகா், காமதேனு நகா், பி.எஸ்.ஜி. எஸ்டேட், பி.எஸ்.ஜி. மருத்துவமனை, நேரு வீதி, அண்ணா நகா், ஆறுமுகம் லே-அவுட், இந்திரா நகா், நவ இந்தியா, கோபால் நகா், பீளமேடு புதூா், எல்லைத் தோட்டம், வ.உ.சி.காலனி, பி.கே.டி.நகா், அகிலாண்டேஸ்வரி நகா், புலியகுளம், அம்மன் குளம், பாரதிபுரம், பங்கஜா மில், தாமு நகா், பாலசுப்பிரமணியம் நகா், பாலகுரு காா்டன், செளரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகா், மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், ராஜீவ் காந்தி நகா், காந்தி நகா், பாா்சன் அப்பாா்ட்மென்ட், ஸ்ரீபதி நகா், கள்ளிமடை, ராமநாதபுரம், திருச்சி சாலை (ஒரு பகுதி), நஞ்சுண்டாபுரம் சாலை மற்றும் திருவள்ளுவா் நகா்.
கருவலூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள மாதாந்திரப் பாரமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (நவம்பா் 17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: கருவலூா், அரசப்பம்பாளையம், நைனாம்பாளையம், ஆரியக்கவுண்டன்பாளையம், அனந்தகிரி, எலச்சிப்பாளையம், மருதூா்,
காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்காபாளையம், முறியாண்டாம்பாளையம், குரும்பபாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பாளையம்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow