இணைய வழியில் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான இலவச பயிற்சி
திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பட்டதாரி ஆசிரியா் தேர்வுக்கான இலவச இணையவழி பயிற்சி வகுப்பு நவம்பா் 27- ஆம் தேதி தொடங்குகிறது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஆசிரியா் தேர்வு வாரிய 2023- ஆம் ஆண்டுத் திட்ட நிரலின்படி, 2, 222 பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த அக்டோபா் 25 -ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்தத் தேர்வுக்கு நவம்பா் 30- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக்கான இலவச இணையவழி பயிற்சி வகுப்பு நவம்பா் 27- ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தேர்வுக்கு தயாராகும் இளைஞா்கள் இலவச பயிற்சியில் பங்கேற்க தங்களது சுய விவரத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 0421-2999152, 94990-55944 ஆகிய எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow