IAS போட்டி தேர்வுக்கு மீனவ பட்டதாரிகளுக்கு பயிற்சி
மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்களுக்கு, ஐ.ஏ.எஸ்., போட்டி தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது.இது குறித்து, கரூர் கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கைசென்னை அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையத்துடன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை இணைந்து ஆண்டுதோறும், 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து, அவர்கள் குடிமைப்பணி போட்டி தேர்வில் கலந்து கொள்ள பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இப்பயிற்சியில் கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் சேரலாம்.
இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை திருச்சி (மண்டலம்) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களில் அலுவலக வேலை நாள்களில் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வரும் 18க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் எண்.4 காயிதே மில்லத்தெரு, காஜாநகர் திருச்சி-20 (தொலைபேசி எண் – 0431 2421173) அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow