பாகிஸ்தான் வெற்றி பெற 338 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் குவித்துள்ளது.
இதையடுத்து 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் களம் இறங்க உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 84 ரன்களும், ஜோ ரூட் 60 ரன்களும், ஜானி பேர்ஸ்டோ 59 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோர் உயர காரணமாக இருந்தனர். இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றாலும் நெட் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணியை விட பின்தங்கி இருக்கும் என்பதால் உலகக் கோப்பை அரையிறுதி சுற்றில் விளையாடும் வாய்ப்பு இழக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow