TAMIL MIXER
EDUCATION.ன்
கல்வி
செய்திகள்
எல்.கே.ஜி., இலவச அட்மிஷன் – 346 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம்
எல்.கே.ஜி., இலவச அட்மிஷனுக்கு,
வரும்
18ம்
தேதி
வரை
விண்ணப்பிக்க
கால
அவகாசம்
உள்ளதால்,
வாய்ப்பை
பயன்படுத்தி
கொள்ளுமாறு
கல்வித்துறை
தெரிவித்துள்ளது.கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி
(ஆர்.டி.இ.,), தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில்
பின்தங்கியோரின்
குழந்தைகள்,
கல்வி
கட்டணமின்றி,
எட்டாம்
வகுப்பு
வரை
படிக்கலாம்.
இத்திட்டத்திற்கு,
கோவை
மாவட்டத்தில்,
346 பள்ளிகளில்
விண்ணப்பிக்கலாம்.
இப்பள்ளிகளில்
ஆரம்ப
வகுப்பு
எதுவோ
அந்த
வகுப்பில்,
25 சதவீத
இடங்கள்,
திட்டத்திற்கு
ஒதுக்கீடு
செய்யப்படுகிறது.மாணவரின் புகைப்படம், பிறப்பு சான்று, பெற்றோரின் அடையாள அட்டை, முகவரி சான்று உட்பட ஆவணங்களை உள்ளீடு செய்து, குடியிருப்புக்கு
சுற்றி,
ஒரு
கிலோமீட்டர்
தொலைவில்
உள்ள
பள்ளிகளை
தேர்வு
செய்யலாம்.
அதிகபட்சம்,
5 பள்ளிகள்
வரை
விண்ணப்பிக்கலாம்.
குறிப்பிட்ட
பள்ளிக்கு
வரும்
விண்ணப்பங்கள்
பொறுத்து,
குலுக்கல்
முறையில்
மாணவர்களின்
அட்மிஷன்
உறுதி
செய்யப்படும்.இதற்கு விண்ணப்பிக்க
வரும்
18ம்
தேதி
இறுதி
நாள்.
சேர்க்கை உறுதி செய்த மாணவர்களின் விபரம், வரும் 21ல், பள்ளி தகவல் பலகையில் ஒட்டப்படும். காத்திருப்போர்
பட்டியல்
இருப்பின்,
பெற்றோரின்
மொபைல்
போன்
எண்ணுக்கு,
வரும்
24ல்
குறுந்தகவல்
அனுப்பப்படும்.
சேர்க்கை
உறுதி
செய்ததும்,
எமிஸ்
இணையதளத்தில்,
ஆர்.டி.இ., திட்டத்தின் கீழ் சேர்ந்த மாணவர்களின் பெயர்களை பதிவேற்ற வேண்டும். இதுசார்ந்த அறிவிப்பு, பள்ளிகளுக்கு
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாமிடம் கோவைஆர்.டி.இ., திட்டத்தின் கீழ், சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் மட்டுமே குழந்தைகளை சேர்க்க முடியும். அதிக தனியார் பள்ளிகள், அதிக இடங்கள் கொண்ட மாவட்டங்களின்
பட்டியலில்,
சென்னை
(657) முதலிடத்திலும்,
மதுரை
(399) இரண்டாமிடத்திலும்
உள்ளது.
கோவை
மாவட்டம்,
346 பள்ளிகளுடன்
மூன்றாமிடத்தில்
உள்ளது.
இதில்,
62 பள்ளிகளுடன்,
நீலகிரி
மாவட்டம்
கடைசி
இடத்தில்
உள்ளது.