தமிழ்நாட்டில் 10, 11ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 19ம் தேதியன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 06.04.2023 முதல் 20.04.2023 வரையிலான நாட்களில் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 5.01 லட்சம் மாணவர்கள், 4.75 லட்சம் மாணவிகள் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், இதற்கான தேர்வு முடிவுகள் வரும் 19ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுளளது.
இதுகுறித்து, அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “மார்ச் ஏப்ரல் 2023-ல் நடைபெற்ற 2022-2023ஆம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 19.05.2023 (வெள்ளிக்கிழமை) அன்று பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தின் முதல் தளத்தில் வெளியிடப்படப்படவுள்ளது.
10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எதிர்வரும் 19ம் தேதி காலை 10 மணிக்கும், 11ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் அன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும்.
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நேரம் மற்றும் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரி மூலம் அறிந்துக் கொள்ளலாம்.
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google



