காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வந்தது எப்படி? 370, 35A ஆகிய சாசன சட்டங்கள் காஷ்மீரை எப்படி காக்கின்றன?
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஜம்மு காஷ்மீரை ஆண்ட, மகாராஜா ஹரிசிங், மக்களின் நலன் கருதி ஜம்மு – காஷ்மீர் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க 1949ம் ஆண்டு சம்மதித்தார்.
இதனையடுத்து இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டது. அந்த சமயம், காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்டதால் இன்று வரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்றே அழைக்கப்பட்டு வருகிறது.
ஆரம்ப காலத்தில் ஜம்மு – காஷ்மீருக்கு தனிக் கொடி, அரசியல் சாசனங்கள் என சுயாட்சி கொண்ட மாநிலமாக இருந்தது. பின்னர் இந்திய நாட்டுடன் இணைந்ததை அடுத்து, மற்ற மாநிலங்களை போன்று இல்லாமல், மகாராஜா ஹரிசிங் விதித்த நிபந்தனைகள் படி சில சிறப்பு அந்தஸ்துகள் அம்மாநிலத்துக்கு மட்டும் வழங்கப்பட்டன. இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவில் உள்ள 370-ன் கீழ் சிறப்பு சலுகைகள் ஜம்மு காஷ்மீருக்காக உருவாக்கப்பட்டது.
370 அரசியல் சாசனம் சட்டம் என்ன சொல்கிறது?
1. வெளியுறவு, தகவல் தொடர்பு மற்றும் ராணுவம் ஆகிய துறைகளை தவிர பிற துறைசார்ந்த நடவடிக்கைகள் மீது மத்திய அரசு நிறைவேற்றும் சட்டங்களை ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையின் சம்மதத்துடன் இயற்றாவிடில் அது இம்மாநிலத்திற்கு பொருந்தாது.
2. மற்ற மாநிலத்தைச் சேர்ந்த மக்கள், காஷ்மீரில் சொத்துகளை வாங்க முடியாது. ஆனால், மற்ற மாநிலங்களில் காஷ்மீர் மக்கள் சொத்துகளை வாங்கலாம்.
3 வெளிமாநில ஆண்களை காஷ்மீரில் வாழும் பெண்கள் மணமுடித்தால் அவர்களால் இங்கு சொத்துகளை வாங்க முடியாது. ஆனால், வெளிமாநில பெண்களை திருமணம் செய்துக்கொள்ளும் காஷ்மீரைச் சேர்ந்த ஆண்களுக்கு இது பொருந்தாது.
4. மாநிலத்தின் எல்லைகளை விரிவுபடுத்தவோ, குறைக்கவோ முடியாது என்கிறது அரசியசல் சாசனத்தின் 370-வது விதி.
1954ம் ஆண்டு காஷ்மீர் மாநில அரசின் ஒப்புதலுடன், இந்திய குடியரசுத் தலைவரின் ஆணைப்படி இந்திய அரசியலமைப்பு சட்டம் 370 இணைப்பு (1)ல் அரசியலமைப்பு சட்டம் 35ஏ என்ற பிரிவு சேர்க்கப்பட்டது.
35A என்ன சொல்கிறது?
1. 35ஏ பிரிவின் மூலம், ஜம்மு காஷ்மீரில் அந்த மாநில மக்களால் மட்டுமே அசையா சொத்துகளை வாங்க முடியும். வெளிமாநிலத்தவர் எவருக்கும் எந்த நில உரிமையும் கிடையாது. 10 ஆண்டுகள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வாழ்ந்தவர்களுக்கு சொத்து வாங்கும் உரிமை உண்டு.
2 வெளி மாநிலத்தவர்களால் காஷ்மீரில் அரசு வேலை, அரசு வழங்கும் சலுகைகள் மற்றும் மானியங்களை பெற முடியாது.
3. ஜம்மு காஷ்மீரின் நிரந்தர குடிமக்கள் யார் என்பதையும், அவர்களுக்கு அளிக்கவேண்டிய உரிமையை தீர்மானிக்கும் உரிமையும் மாநில அரசுக்கே உள்ளது.
4. சமத்துவ, சம உரிமை பாதிக்காத வகையில் காஷ்மீர் மாநில அரசு அதன் சட்டப்பேரவையில் எந்த சட்டத்தையும் இயற்றிக்கொள்ளலாம் என்ற அதிகாரத்தை தருகிறது சட்டம் 35A.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


