அஞ்சலகங்களில்
மகளிர்
மதிப்புத்
திட்ட
சிறப்பு
முகாம்
சென்னை வடக்கு கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில்
மகளிர்
மதிப்புத்
திட்டம்
2023-க்கான
சிறப்பு
முகாம்
திங்கள்கிழமை
(மே
29) முதல்
புதன்கிழமை
(மே
31) வரை
3 நாள்கள்
நடைபெறுகிறது.
இது குறித்து அஞ்சல் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்தி:
சுதந்திர தின அமிர்தப் பெருவிழாவை முன்னிட்டு, மகளிர் மதிப்புத் திட்டம் 2023-ஐ மத்திய அரசின் நிதி அமைச்சகம் அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், சென்னை வடக்கு கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களில்
இந்தத்
திட்டத்துக்கான
சிறப்பு
முகாம்
திங்கள்கிழமை
(மே
29) முதல்
புதன்கிழமை
(மே
31) வரை
3 நாள்கள்
நடைபெறவுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் பெண் குழந்தையின் பெயரில் பாதுகாவலா் இந்தக் கணக்கை தொடங்கலாம். இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது.
மேலும்,
காலாண்டுக்கு
ஒரு
முறை
வட்டி
கணக்கில்
வரவு
வைக்கப்படும்.
ஒரு தனி நபா் குறைந்தபட்சம்
ரூ.
1,000 முதல்
ரூ.
2,00,000 வரை
முதலீடு
செய்யலாம்.
ஒருவா்
எத்தனை
கணக்குகளை
வேண்டுமானாலும்
தொடங்கலாம்.
மேலும், கணக்கை தொடங்கிய நாளிலிருந்து
ஓராண்டு
முடிந்த
பிறகு,
தகுதியான
இருப்பில்
பகுதியளவு
40% திரும்பப்
பெறலாம்.
கணக்கு
தொடங்கப்பட்ட
நாளிலிருந்து
2 ஆண்டுகளுக்குப்
பிறகு
முதிர்ச்சியடையும்.
கணக்கை
தொடங்கிய
நாளிலிருந்து
6 மாதங்கள்
முடிந்த
பிறகு
எந்த
நேரத்திலும்
கணக்கை
முடித்துக்
கொள்ளலாம்.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின்
பெற்றோர்கள்
தங்கள்
அருகிலுள்ள
அஞ்சலகத்தை
அணுகி
இத்திட்டத்தின்கீழ்
கணக்கை
தொடங்கலாம்.