TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
10 மற்றும் 11ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
10 மற்றும் 11ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகியது.
இந்த பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு வரும் ஜூன் மாதம் துணை தேர்வு நடைபெற உள்ளது.இந்த துணைத் தேர்வு எழுதுவதற்கு மாணவர்கள் 23ஆம் தேதி முதல் மே 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்திருந்தது.
இதில், விண்ணப்பிக்காத மாணவர்களின் நலன் கருதி மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கபடுவதாக அறிவிக்கப்பட்டது.
எனவே, மாணவர்கள் இன்று மாலைக்குள் விரைந்து விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.