TAMIL MIXER
EDUCATION.ன்
தஞ்சாவூா்
செய்திகள்
தொழிற் பயிற்சி நிலையங்களில்
சேர
விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள
அரசு,
தனியார்
தொழிற்
பயிற்சி
நிலையங்களில்
சேர
ஜூன்
7ம்
தேதிக்குள்
விண்ணப்பிக்கலாம்
என
மாவட்ட
ஆட்சியா்
தீபக்
ஜேக்கப்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள
தஞ்சாவூா்,
திருவையாறு,
ஒரத்தநாடு
ஆகிய
அரசு
தொழிற்பயிற்சி
நிலையங்கள்
மற்றும்
தனியார்
தொழிற்பயிற்சி
நிலையங்களில்
சேருவதற்கு
இணையதளம்
வாயிலாக
ஜூன்
7ம்
தேதி
மாலை
5 மணி
வரை
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள்
இணையதளத்தில்
பதிவு
செய்ய
வேண்டும்.
மேலும்,
மாணவா்களுக்கு
உதவும்
வகையில்,
தஞ்சாவூா்
மாவட்டத்தில்
உள்ள
அரசு
தொழிற்
பயிற்சி
நிலையங்கள்
மற்றும்
மாவட்டத்
திறன்
பயிற்சி
அலுவலகத்தில்
சோக்கை
உதவி
மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன.
பள்ளி மாற்றுசான்றிதழ்,
மதிப்பெண்
சான்றிதழ்,
8 அல்லது
10 அல்லது
12ம்
வகுப்பு
மதிப்பெண்
சான்றிதழ்,
ஜாதி
சான்றிதழ்,
முன்னுரிமை
சான்றிதழ்
(மாற்று
திறனாளிகள்,
விதவை,
முன்னாள்
ராணுவத்தினரின்
வாரிசுகள்,
மாநில
அளவில்
விளையாட்டு
போட்டிகளில்
முதன்மையானவா்,
தாய்,
தந்தை
இழந்த
ஆதரவற்ற
மாணவா்கள்)
ஆகியவற்றுடன்
2 பாஸ்போர்ட்
அளவு
புகைப்படங்கள்,
ஆதார்
அட்டை
ஆகிய
அசல்
ஆவணங்கள்
மற்றும்
விண்ணப்பங்களை
இலவசமாக
பதிவேற்றம்
செய்து
கொள்ளலாம்.
மேலும், விவரங்களுக்கு
தஞ்சாவூா்
அரசு
தொழிற்
பயிற்சி
நிலைய
துணை
இயக்குநா்
/ முதல்வா்
அல்லது
அருகிலுள்ள
அரசு
தொழிற்பயிற்சி
நிலையங்களைத்
தொடா்பு
கொள்ளலாம்.
தொடா்பு
எண்கள்:
9994043023,
7708709988, 9840950504, 9442220049.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


