நாகை கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாட்டுக் கோழி வளா்ப்பு குறித்து இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து அந்த மையத்தின் தலைவா் சி. சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை கால்நடை மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வெள்ளிக்கிழமை (அக்.13) நாட்டுக் கோழி வளா்ப்பு தொடா்பான இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதில், பங்கேற்க விரும்புவோா் நேரில் அல்லது 04365-247123 தொலைபேசியில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். நாட்டுக் கோழிகளின் இனங்கள், வளா்ப்பு முறைகள், கொட்டகை அமைப்பு, தீவன மேலாண்மை, குஞ்சுகள் பராமரிப்பு மற்றும் நோய் பராமரிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படும்.