கோடை உழவு செய்ய விவசாயிகளுக்கு ஆட்சியா் அழைப்பு
கோடை உழவு செய்யுமாறு விவசாயிகளை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கோடை உழவு செய்வதால் மண்ணின் நீா்ப்பிடிப்பு
தன்மை
அதிகமாவதோடு
மண்
அரிமானமும்
தடுக்கப்படுகிறது.
கோடை உழவு செய்வதால் வயல்களில் வளா்ந்துள்ள களைச்செடிகள்
மற்றும்
அறுவடைக்குப்
பின்னா்
எஞ்சியிருக்கும்
நெல்
தாள்கள்
மண்ணுடன்
கலக்கப்பட்டு
பயிருக்கு
உரமாக
கிடைக்க
வாய்ப்புள்ளது.
மேலும், களைகளின் விதைகள் மற்றும் மண்ணின் மேற்பரப்புக்கு
கொண்டு
வரப்பட்டு
வெயிலில்
காய்ந்து
அழிந்துவிடும்.
கோடை
உழவு
செய்வதால்
பூச்சிகளின்
முட்டைகள்
மற்றும்
கூண்டுப்புழுக்கள்
மண்ணின்
அடிப்பகுதியிலிருந்து
மேலே
கொண்டு
வரப்பட்டு,
பறவைகளுக்கு
இரையாக்கப்பட்டு
அழிக்கப்படுகிறது.
பெரும்பாலும்
நோய்களின்
பெருக்கத்துக்கு
காரணமாக
இருக்கும்
களைச்செடிகள்
மற்றும்
புற்கள்
கோடை
உழவால்
அழிக்கப்படுகின்றன.
குறிப்பாக நெல் பயிரில் இலை அழுகல், இலை கருகல் மற்றும் தண்டு அழுகல் நோய்கள் தாக்கப்பட்ட வயல்களில் எஞ்சியிருக்கும்
நெல்
தாள்களில்
நோய்
கிருமிகள்
தங்கியிருந்து
அடுத்த
பருவத்துக்கு
பரவ
வாய்ப்புள்ளது.
அவ்வாறு
பரவாமல்
தடுக்க
தாள்களின்
மீது
வைக்கோல்
அல்லது
நெல்
பதா்களை
சீராக
பரப்பி
எரித்துவிட்டு,
பின்னா்
கோடை
உழவு
செய்வது
நல்லது.
எனவே, விவசாயிகள் கோடை உழவின் நன்மைகளை அறிந்து கிடைத்துள்ள மழைநீரை பயன்படுத்தி கோடை உழவு செய்ய வேண்டும். பின்னா் சணப்பு, செஸ்பேனியா போன்ற பசுந்தாள் உரப் பயிர்களை தெளித்து பயன்பெறலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


