மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர்சீனிவாசன் அறிக்கை:கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், நடப்பாண்டுக்கான முழு நேர மேலாண்மை பயிற்சியில், ஆன்லைன் மூலம் சேர்க்கை கடந்த 6ம் தேதியுடன் நிறைவு பெற்றது.
தற்போது, நேரடியான சேர்க்கைக்கு கால அவகாசம் வழங்கி நடைபெறுகிறது. இதில் சேர விரும்புவோர் நேரடியாக பயிற்சி நிலையத்தில் உரிய சான்றிதழ்களுடன் சென்று விண்ணப்பிக்கலாம்.
இப்பயிற்சியில் 17 வயது பூர்த்தியான ஆண், பெண் இருபாலரும் சேரலாம். அதிகபட்ச வயது வரம்பில்லை. மேலும் விவரங்களுக்கு, 0422 – 244 2186 மற்றும் 244 0219 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.