அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அக். 17-ஆம்தேதி நடைபெற உள்ள பேச்சுப்போட்டியில் பங்கேற்க மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளாா் கரூா் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாவட்டத் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பேரறிஞா் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அக். 17-ஆம்தேதி கரூா் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள கூடுதல் கட்டடக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
பள்ளி மாணவா்களுக்கான பேச்சுப்போட்டி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.
இதில் பங்கேற்று வெற்றிபெறுவோருக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் மற்றும் அரசு பள்ளி மாணவா்கள் இருவருக்கு சிறப்புப் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
போட்டிக்கான தலைப்புகள்: 1. காஞ்சித் தலைவன் 2. அண்ணாவும், பெரியாரும் 3. தமிழும் அண்ணாவும் 4. எழுத்தாளராக அண்ணா 5. தென்னாட்டு பொ்னாட்ஷா போன்ற தலைப்புகளில் போட்டிகள் நடைபெறும்.
பள்ளி மாணவ, மாணவிகள் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வழியாக இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகக் கூடுதல் கட்டடத்திலுள்ள தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா், அலுவலக தொலைபேசி எண்- 04324 – 255077ஐ தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


