TAMIL MIXER
EDUCATION.ன்
கல்வித்துறை செய்திகள்
இடைநிலை ஆசிரியர் மனமொத்த மாறுதல் கலந்தாய்விற்கு
விண்ணப்பிக்கலாம்
தொடக்கல்வித்துறையில்
பணியாற்றி
வரும்
இடைநிலை
ஆசிரியர்களுக்கான
மனமொத்த
மாறுதல்
கலந்தாய்விற்கு
விண்ணப்பிக்கலாம்
என்றும்,
30ம்
தேதிக்குள்
பணியிட
மாறுதல்
வழங்கப்படும்
என்றும்
தொடக்கக்
கல்வித்துறை
அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில்
உள்ள
அரசுப்
பள்ளிகளில்
பணியாற்றும்
ஆசிரியர்களுக்கு
ஆண்டுத்தோறும்
பணியிட
மாறுதல்
கலந்தாய்வு
நடத்தப்பட்டு
வருகிறது.
அதன் அடிப்படையில்
நடப்பாண்டில்
ஆசிரியர்களுக்கான
பணியிட
மாறுதல்
கலந்தாய்வு
கடந்த
மே
மாதம்
நடத்தப்பட்டது.
அதில்
தொடக்கக்கல்வித்துறையில்
பணியாற்றும்
தலைமை
ஆசிரியர்களுக்கு
பணியிட
மாறுதல்
கலந்தாய்வும்,
இடைநிலை
மற்றும்
பட்டதாரி
ஆசிரியர்களுக்கு
ஒன்றியத்திற்குள்
பணியிட
மாறுதல்
கலந்தாய்வும்
நடத்தப்பட்டது.
தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு குறித்து நீதிமன்றத்தில்
வழக்கு
இருப்பதால்,
பதவி
உயர்வு
கலந்தாய்வு
நடத்தப்படாமல்
உள்ளது.
வெளிப்படை தன்மையுடன் நடத்தப்பட்ட கலந்தாய்வின்
மூலம்
தொடக்கக்
கல்வித்
துறையில்
424 நடுநிலைப்பள்ளி
தலைமை
ஆசிரியர்களும்,
1111தொடக்கப்பள்ளி
தலைமை
ஆசிரியர்களும்,
தொடக்கப்
பள்ளிகளில்
பணி
புரியும்
1777 இடைநிலை
ஆசிரியர்கள்
ஒன்றியத்திற்குள்ளும்
பணியிட
மாறுதல்
பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் தொடக்கல்வித்துறையில்
பணியாற்றி
வரும்
இடைநிலை
ஆசிரியர்களுக்கு
மனமொத்த
மாறுதல்
மூலம்
பணியிட
மாறுதல்
வரும்
30ம்
தேதிக்குள்
வழங்கப்பட
உள்ளது.
இது குறித்து தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில்:
தொடக்கக் கல்வித்துறையின்
கட்டுப்பாட்டின்
கீழ்
செயல்பட்டு
வரும்
ஊராட்சி
ஒன்றிய,
நகராட்சி,
தொடக்க,
நடுநிலைப்
பள்ளிகளில்
பணிபுரிந்து
வரும்
இடைநிலை
மற்றும்
பட்டதாரி
ஆசிரியர்கள்
மனமொத்த
மாறுதல்
கோரி
விண்ணப்பிக்கலாம்.
மனமொத்த மாறுதல் கோரும் ஆசிரியர்கள் விண்ணப்பங்களை
வட்டார
கல்வி
அலுவலகத்தில்
ஜூன்
13ம்
தேதி
முதல்
ஜூன்
19ம்
தேதி
வரையில்
வட்டாரக்
கல்வி
அலுவலகத்தில்
சமர்பிக்க
வேண்டும்.
அந்த விண்ணப்பங்களை
பரிசீலித்து
மாவட்டக்
கல்வி
அலுவலரிடம்
22ம்
தேதி
ஒப்படைக்க
வேண்டும்.
பின்னர்
அதனை
மாவட்டக்கல்வி
அலுவலர்கள்
விண்ணப்பங்களை
கூர்ந்தாய்வு
செய்து,
கல்வித்
தகவல்
மேலாண்மை
முறைமை
இணையதளத்தில்
ஜூன்
26ம்
தேதிக்குள்
பதிவேற்றம்
செய்ய
வேண்டும்.
அரசாணையின் படி மனமொத்த மாறுதல் பெறுவதற்கான விதிகளை நிறைவு செய்யும் ஆசிரியர்களுக்கு
மட்டுமே
அனுமதிக்கப்படுவர்.
விண்ணப்பம்
செய்யும்
ஆசிரியர்கள்
விதிமுறைகளை
நிறைவு
செய்கின்றனரா?
என்பதை
வட்டாரக்
கல்வி
அலுவலர்கள்
ஆய்வு
செய்து
மாவட்ட
தொடக்கக்
கல்வி
அலுவலருக்கு
அனுப்ப
வேண்டும்.
விண்ணப்பம்
அளிக்கும்
இரு
ஆசிரியர்களுக்கும்
விண்ணப்பத்தை
பெற்றதற்கான
ஒப்புகைச்சீட்டு
வழங்க
வேண்டும்.
மேலும் விண்ணப்பங்கள்
குறித்த
பதிவேட்டை
பராமரிப்பதுடன்,
விண்ணப்பம்
ஏற்கப்பட்டதா?
நிராகரிக்கப்பட்டதா?
என்பதையும்
பதிவு
செய்ய
வேண்டும்.
விண்ணப்பம்
நிராகரிக்கப்பட்டால்
அதற்கான
விதிகளை
சுட்டிக்காட்டி
தொடர்புடைய
ஆசிரியர்களுக்கு
எழுத்துப்பூர்வமாக
தெரிவிக்க
வேண்டும்”
என
அறிக்கையில்
தெரிவித்துள்ளார்.
மேலும்
மனமொத்த
மாறுதலுக்கு
விண்ணப்பம்
செய்தவர்களுக்கு
ஜூன்
30ம்
தேதிக்குள்
பணியிட
மாறுதல்
வழங்கப்படும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


