TAMIL MIXER
EDUCATION.ன்
தேர்வு
செய்திகள்
சர்வதேச திறன் போட்டிக்கு தகுதி தேர்வுக்கு விண்ணப்பங்கள்
வரவேற்பு
சர்வதேச திறன் போட்டிகளில் பங்கேற்க மாவட்ட அளவிலான தகுதி தேர்வுக்கு, வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
சர்வதேச அளவிலான திறன் போட்டிகள், வரும் 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரான்சில் உள்ள லியான் நகரில் நடைபெற உள்ளது.
தற்கு வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் ‘இந்தியா ஸ்கில்ஸ் 2023′ திறன் போட்டியில் பங்கேற்க போட்டியாளர் தேர்வு நடக்கிறது.முதல் கட்டமாக மாவட்ட அளவிலான திறன் போட்டிகள், வரும் ஜூலை 15ம் தேதி முதல் நடைபெற உள்ளது.மாவட்ட அளவில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், https://naanmudhalvan.tn.gov.in/tnskills/#
எனும்
இணையதளம்
மூலம்
விண்ணப்பிக்க
வேண்டும்.
இதில், வெற்றி பெறும் போட்டியாளர்கள்
மாநில
அளவிலான
திறன்
போட்டியிலும்,
தொடர்ந்து
மண்டல
அளவிலான
போட்டியிலும்
பங்கேற்க
வேண்டும்.
இதில்
வெற்றிபெறும்
போட்டியாளர்கள்,
வரும்
டிசம்பர்
மாதம்
நடைபெற
உள்ள
இந்திய
அளவிலான
திறன்
போட்டியில்
பங்கேற்லாம்.மொத்தம் உள்ள 55 திறன் போட்டிகளில் ஏதேனும் ஒரு பிரிவில் தங்களின் தனித்திறமையை
வெளிப்படுத்தும்
விதமாக
மாவட்ட
அளவில்
வரும்
30ம்
தேதிக்குள்
விண்ணப்பிக்க
வேண்டும்.
இப்போட்டியில்
பங்கேற்க
தனித்திறன்
பெற்ற
10 வயது
நிரம்பியவர்கள்
முதல்
உயர்நிலைக்
கல்வி,
ஐ.டி.ஐ., பாலிடெக்னிக்,
பொறியியல்,
கலை
மற்றும்
அறிவியல்
கல்லுாரி,
மருத்துவ
சார்பு
துறைகளில்
படித்து
கொண்டிருப்பவர்கள்,
தனித்திறன்
பெற்றவர்கள்,
தொழிற்சாலைகளில்
பணிபுரிபவர்கள்
மற்றும்
தொழிற்பழகுநர்
பயிற்சி
பெறுபவர்கள்
என
ஆண்,
பெண்
இருபாலரும்
விண்ணப்பிக்கலாம்.
மேலும் இப்போட்டி குறித்த விவரங்களை நான் முதல்வன் இணையதளத்திலும்
கூடுதல்
விபரங்களுக்கு
மாவட்ட
திறன்
பயிற்சி
அலுவலகம்,
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகம்,
விழுப்புரம்,
அலுவலகத்தை
தொடர்பு
கொண்டு
அறிந்து
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


