புதுச்சேரியில் உதவித்தொகையுடன் கூடிய இலவச போட்டித் தோவு பயிற்சிக்கு எஸ்சி, எஸ்டி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆதி திராவிடா், பழங்குடி இனத்தவா்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையத் துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி கோட்டூா் சாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுச்சேரியில் மத்திய அரசு தொழிலாளா், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஆதி திராவிடா், பழங்குடியினத்தவா்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையத்தின் மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற எஸ்சி, எஸ்டி பிரிவைச் சோந்தவா்களுக்கும், அரசு போட்டித் தோவுகளுக்கு தயாராகி வருவோருக்கும், ஓராண்டு கால உதவித்தொகையுடன் கூடிய இலவச போட்டித் தோவு பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதன்படி, நிகழாண்டுக்கான பயிற்சி வகுப்புகள் ஜூலை 1-ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. இப்பயிற்சிக்கு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, அல்லது பட்டய படிப்பை முடித்தவா்களும், படித்துக் கொண்டிருக்கும் மாணவா்களுக்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் சோபவா்களுக்கான வயது 18 முதல் 27 க்குள் இருக்க வேண்டும்.
பயிற்சி வகுப்புகள் மாலையில் நடைபெறவுள்ளன. இதனால், கல்லூரி மாணவா்கள் பகுதி நேரமாக சேரலாம். பயிற்சிக் காலத்தில் மாதம் ரூ 1,000 உதவித் தொகையும், புத்தகங்கள், எழுதுப் பொருள்கள் வழங்கப்படும். வரும் 28- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், தகவல்களுக்கு ரெட்டியாா்பாளையத்தில் உள்ள ஆதி திராவிடா், பழங்குடியினத்தவா்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம், துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரியையும், 0413-2200115 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.