ஆய்வக தொழில் நுட்பவியலாளர் பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் வாயிலாக ஆய்வக தொழில் நுட்பவியலாளர் தரம்-III பணிடத்திற்கு நேரடி தேர்வு மூலம் ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முன்னாள் படைவீரர்களுக்கு 5 சதவீதம் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் படைவீரர்களுக்கு வயது உச்ச வரம்பு எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி இனப்பிரிவினை சார்ந்தவர்களுக்கு வயது உச்ச வரம்பு இல்லையெனவும், ஓசி பிரிவினைச் சார்ந்தவர்களுக்கு 50 வயதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதிவாய்ந்த முன்னாள் படைவீரர்கள் வரும் 2ம் தேதிக்குள் www.mrb.tn.gov.in என்ற இணையதள மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் அறிய, வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.