தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 1.1.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தினை இந்திய தேர்தல் ஆணையம் கீழ்க்காணும் அட்டவணையின்படி அறிவித்துள்ளது: அதன்படி, * வாக்குச்சாவடி நிலைய அலுவலர் 21.7.2023 முதல் 21.8.2023 வரை வீடு வீடாக வந்து வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பார்.
- வாக்குச்சாவடிகளை திருத்தியமைத்தல் மற்றும் மறுசீரமைத்தல், வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல், வாக்காளர் பட்டியலில் உள்ள மங்கலான, மோசமான, தரமற்ற படங்களை மாற்றி நல்ல தரமான புகைப்படங்களை உறுதி செய்யும் பணிகளை 22.08.2023 முதல் 29.09.2023 வரை செய்யப்படும்.
- இதைத்தொடர்ந்து ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் 17.10.2023 அன்று வெளியிடப்படும்.
- 17.10.2023 முதல் 30.11.2023 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்கம், திருத்தம் செய்ய விண்ணப்பங்கள் பெறப்படும். இந்த விண்ணப்பங்களை அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர் அல்லது வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் அளிக்கலாம். சிறப்பு முகாம் குறித்த தகவல் பின்னர் தெரிவிக்கப்படும
- புதிதாக பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய விண்ணப்பம் அளித்தவர்களை புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணி 26.12.2023க்குள் முடிவடையும்.
- இதைத்தொடர்ந்து 5.1.2024 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
- வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 18 முதல் 25 வயதுக்கு கீழுள்ள மனுதாரர்கள் வயது சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயம். www.voters.eci.gov.in, https://voterportal.eci.gov.in ஆகிய இணையதள முகவரி மற்றும் ‘வாக்காளர் உதவி’ கைபேசி செயலி ஆகியவற்றின் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
- 1.1.2024, 1.4.2024, 1.7.2024 மற்றும் 1.10.2024 ஆகிய தேதிகளில் 18 வயது பூர்த்தியடைபவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும், பெயர் சேர்க்க படிவம் 6-ல் விண்ணப்பிக்கலாம்.
படிவ வகைகள்:
- படிவம் 6 புதிய வாக்காளர்களுக்கான விண்ணப்ப படிவம்
- படிவம் 6 ஏ வெளிநாடு வாழ் வாக்காளர் தனது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான விண்ணப்பம்
- படிவம் 6பி வாக்காளர் பட்டியல் அங்கீகாரத்திற்காக ஆதார் எண் உண்மையென சான்றுரைத்தல்
- படிவம் 7 வாக்காளர் பட்டியலில் ஏற்கெனவே உள்ள பெயரை நீக்க கோருவதற்கான விண்ணப்பம்
- படிவம் 8 வீட்டு முகவரியை ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாற்றினாலோ அல்லது தற்போது வசிக்கும் தொகுதிகுள்ளேயே மாற்றுவது, தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்வது, மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவது, மாற்றுத் திறனாளிகளை குறிப்பதற்கான விண்ணப்பப் படிவம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


