SSC MTS தேர்வு அறிவிப்பு: தற்காலிகமாக வெளியிட திட்டமிடப்பட்ட மல்டி-டாஸ்கிங் (தொழில்நுட்பம் அல்லாத) பணியாளர்கள் மற்றும் ஹவால்தார் (CBIC & CBN) தேர்வு, 2023 பற்றிய அறிவிப்பு 14.06.2023 அன்று வெளியாகும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது 30.06.2023 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என SSC தெரிவித்துள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பத்தார்கள் வயது வரம்பு 18-25 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் SC/ ST – 5 years, OBC – 3 years, PwD (Unreserved) – 10 years, PwD (OBC) – 13 years மற்றும் PwD (SC/ ST) – 15 years வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து மெட்ரிகுலேஷன் தேர்வு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Tier 1 – கணினி சார்ந்த தேர்வு(CBT) மற்றும் Tier 2 – Descriptive Type மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.