தோட்டக்கலைத்துறை சார்பில் பாரம்பரிய காய்கறி விதைகளை மீட்டெடுக்கும் வகையில் செயல்படும் விவசாயிகள் மாவட்ட அளவில் ஊக்கப் பரிசு பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தகவல்.
தோட்டக்கலைத் துறையின் மூலம், பாரம்பரிய காய்கறி விதைகளை மீட்டெடுக்க பாரம்பரிய காய்கறி விதைகளை உற்பத்தி செய்து பாரம்பரிய காய்கறி விதைகளை மீட்டெடுக்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு 2023-24- ஆம் ஆண்டிற்கு மாவட்ட அளவில் பாரம்பரிய காய்கறி விதைகள் உற்பத்தி செய்யும் விவசாயிகளை தேர்வு செய்து அரசு நெறிமுறைகளின்படியும், மாவட்டக்குழு ஆய்வின்படியும் முதல் பரிசாக ரூ. 15, 000, இரண்டாம் பரிசாக ரூ. 10, 000 வழங்கப்பட உள்ளது.
ஆகையால் திண்டுக்கல் மாவட்டத்தில் தகுதியான விவசாயிகள் நேரடியாக https://www.tnhorticulture.tn.gov.in/ என்ற இணைய தளம் மூலமாகவோ அல்லது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அணுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய விவரங்களை வழங்கி பதிவுகளை மேற்கொண்டு பரிசுகளை வென்றிடலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


