இந்தியன் வங்கி சுயதொழில் பயிற்சி நிறுவனம் சார்பில், இரு பாலருக்கான அகர்பத்தி மற்றும் மெழுகுவர்த்தி தயாரிப்பதற்கான பயிற்சி தனித்தனியாக, 6 நாட்களும், ‘சிசிடிவி’ பழுது பார்த்தல் குறித்த பயிற்சி, 13 நாட்களும் நடக்க உள்ளது.முற்றிலும் இலவசமாக நடைபெறும் இப்பயிற்சி முகாமில் பங்கேற்போருக்கு, மதிய உணவு வழங்கப்படும்.
பயிற்சி மற்றும் பயிற்சிக்கான கையேடு, பயிற்சி உபகரணம், சான்றிதழ் என, அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.இப்பயிற்சியில் சேர விரும்புவோர், குறைந்தபட்சம், 8ம் வகுப்பும் அதற்கு மேலும் படித்த, 18 முதல், 45 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
காலை 9:30 மணி முதல், மாலை 5:30 மணி வரை பயிற்சி அளிக்கப்படும் பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.குறைவான இடங்களே இருப்பதால், விருப்பமுள்ளவர்கள், இந்தியன் வங்கி சுயதொழில் பயிற்சி மையம், 32ஏ, வரதராஜ பெருமாள் சன்னிதி தெரு, சின்ன காஞ்சிபுரம்- – 631 501 என்ற முகவரிக்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.மேலும், விபரங்களுக்கு 044 – 2726 8037 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


