கால்நடை மருத்துவ கல்லுாரி முதல்வர் செல்வராஜூ வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின், கால்நடை பண்ணை வளாகத்தில், வரும், 10 முதல் 14 வரை, தேசிய வேளாண் மேம்பாட்டு திட்ட நிதியுதவியுடன், ‘கால்நடைகளுக்கான தீவனப்பயிர் சாகுபடி மற்றும் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில்’ ஐந்து நாட்கள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.
இப்பயிற்சியில், தீவனப்பயிர்களின் முக்கியத்துவம், மண் வளங்களுக்கேற்ற தீவனப்பயிர்களின் வகைகள், தானிய வகைகள், புல் வகைகள், பயறு வகைகள் மற்றும் மரவகை தீவனப்பயிர்கள் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கப்படுகிறது.
தீவனப்பயிர்களின் விதை உற்பத்தி தொழில் நுட்பங்கள், ஊறுகாய் புல் தயாரிக்கும் முறைகள் பற்றியும் எடுத்துரைக்கப்படும். விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
விருப்பமுள்ளவர்கள், 04286 -266572, -266491 என்ற தொலைபேசி எண்களிலும், 86374 72930, 94436 96557 என்ற அலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு, தங்களது பெயரை முன்பதிவு செய்து பயன்பெறலாம்.தொடர்புக்கு, தலைவர், கால்நடை பண்ணை வளாகம், கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல்- 637 002 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


