டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ள மாவட்ட நீதிபதி பதவிக்கான தேர்வுக்கு, இலவச பயிற்சி அளிக்கப்படும் என சைதை துரைசாமியின் மனிதநேயம் இலவச பயிற்சி மையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து அந்த மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:மாவட்ட நீதிபதி பதவியில் 50 காலியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில் கடந்த 1ம் தேதி போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டது.
செப்.,30ல் முதல்நிலை தேர்வும், டிச.,2, 3ல் பிரதான எழுத்து தேர்வும் நடத்தப்படுகின்றன. இதில் பங்கேற்க உள்ளவர்களுக்கு, சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., இலவச பயிற்சி மையமும், தமிழகம், புதுச்சேரி பார் கவுன்சிலும் இணைந்து, இலவச பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளன. பயிற்சி பெற விரும்புவோர் இன்று முதல் வரும் 9ம் தேதிக்குள், மனிதநேயம் பயிற்சி மையத்தின் சி.ஐ.டி.நகர் முகவரிக்கு நேரில் வந்தோ, 044 – 2435 8373, 2433 0952 என்ற தொலைபேசி வழியாகவோ, tnbarcouncil@yahoo.com என்ற இ-மெயில் வழியாகவோ விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.