IAS
தேர்வுக்கான இலவச
பயிற்சி–தங்குமிடம், உணவு, ஊக்கத்தொகையும் வழங்கப்படும்–காமராஜ்
பல்கலைக்கழகம்
கடந்த
சில வருடங்களாக யுபிஎஸ்சி
தேர்வில் தமிழக அளவில்
தேர்வு செய்யப்படும் நபர்களின்
எண்ணிக்கை குறைந்து கொண்டே
வருகிறது. இந்த எண்ணிக்கையை தற்போது அதிகரிக்க மதுரை
காமராஜ் பல்கலைகழகத்தில் 2021 ஆம்
வருடத்திற்கான யுபிஎஸ்சி
பயிற்சி வகுப்பு மாணவர்களை
தேர்வு செய்வதற்கான தேர்வு
ஜனவரி 31ஆம் தேதி
ஞாயிற்றுக்கிழமை அன்று
தேர்வு நடைபெற இருக்கிறது. மதுரை காமராஜர் கல்லூரியில் யுபிஎஸ்சி பயிற்சியில் சேர
விரும்புபவர்கள் அதற்கான
விண்ணப்ப படிவத்தை மதுரை
காமராஜ் பல்கலை கழக
www.mkuniversity.co.in என்ற
இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இந்த நுழைவுத் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்ற முதல் 100 பேருக்கு தமிழ்நாடு அரசின் சுழற்சி முறையில் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் ஜூன் 26ஆம் தேதி வரை பயிற்சி அளிக்கப்படும். இவர்களுக்கு இலவசமாக பயிற்சிகளும் வழங்கப்படும். இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் வெளியூர் நபர்களுக்கு தங்குமிடம், உணவு, ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


