கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்தின் (டிஎன்பிசி) குரூப் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் ஜூலை 14-ஆம் தேதி தொடங்குகின்றன.
இதுகுறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கெளரிசங்கா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம் நடத்தும் குரூப் -1, குரூப் -2 தேர்விற்க்கான ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தப் பயிற்சி வகுப்புகள் ஜூலை 14-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எதிரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.
இந்த வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் என்ற இணைப்பின் மூலம் தங்களைப் பதிவு செய்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். மேலும் விவரங்களுக்கு 04343-291983 தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த நபா்கள் இலவசப் பயிற்சி வகுப்பில் சோந்து பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.


