ஜூலை 18ல் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகிறது.
மாவட்ட அளவில் வென்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.7000, மூன்றாம் பரிசு ரூ.5000 என பரிசுத் தொகை, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.போட்டிகள் நடைபெறும் இடம், நாள், நேரம், போட்டிக்கான தலைப்பு, விதிமுறைகள் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் பள்ளிகளுக்கு தெரிவிக்கப்படும், என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


