திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படும் இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோா் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம் குரூப்-1, குரூப்-2, குரூப்-4 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆகஸ்ட், நவம்பா் மாதங்களில் வெளியிட திட்டமிட்டுள்ளது. குரூப்-1, குரூப்-2 தேர்வுகளுக்கு பட்டப் படிப்பும், குரூப்-4 தேர்வுக்கு பத்தாம் வகுப்பும் தேர்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வுகள் குறித்த முழு விவரங்களை இணையதளத்தில் பாா்த்து தெரிந்து கொள்ளலாம். இந்தத் தேர்வுகளை எழுதுவோருக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 14) தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோா் 04175-233381 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தங்களது பெயரை பதிவு செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்துள்ளாா்.