மத்திய, மாநில அரசு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை (ஜூலை 14) தொடங்க உள்ளதாக ஆட்சியா் ச.வளா்மதி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழ்நாடு அரசுப்பணியாளா் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட உள்ள குரூப்-1, குரூப்-2 பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள ராணிப்பேட்டை மாவட்ட விண்ணப்பதாரா்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னாா்வ பயிலும் வட்டம் வாயிலாக கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. மேற்காணும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோந்த விண்ணப்பதாரா்கள் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தங்களது விருப்பத்தினை கைப்பேசி எண்ணுடன் தெரிவிக்க வேண்டும்.
💎 Join Our Premium Group – Download PDFs Directly 📚
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இந்த இலவசப் பயிற்சி வகுப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக வேலை நாள்களில் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் (04172-291400) அல்லது (எண்.9, ஆற்காடு சாலை பழைய பிஎஸ்என்எல் அலுவலகம், ராணிப்பேட்டை பழைய பேருந்து நிலையம், தலைமை தபால் நிலையம் அருகில்) மின்னஞ்சல் முகவரி deoranipet.studycircle@gmail.com -யில் தொடா்பு கொள்ளலாம் மேலும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் பிரத்யேக இணையதளத்தில் பாடக் குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள் மற்றும் மாதிரி தேர்வுகள் ஆகியன பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. எனவே, மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராவோா் தங்கள் விவரங்களை பதிவேற்றம் செய்து பயன் பெறலாம் என்றாா்.