HomeBlogபெரம்பலூரில் 9ம் தேதி இலவச தொழிற் பயிற்சியில் சேர நேர்காணல் முகாம்

பெரம்பலூரில் 9ம் தேதி இலவச தொழிற் பயிற்சியில் சேர நேர்காணல் முகாம்

 

பெரம்பலூரில் 9ம்
தேதி இலவச தொழிற்
பயிற்சியில் சேர நேர்காணல்
முகாம்

பெரம்பலூரில் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

இந்தியன்
ஓவர்சீஸ் வங்கியின் ஊரக
சுய வேலை வாய்ப்பு
பயிற்சி நிறுவனத்தின் சார்பாக
காகித பைகள் தயாரிப்பது குறித்த இலவச தொழிற்
பயிற்சி 10 நாட்கள் நடைபெற
உள்ளது.

பெரம்பலூர் சங்குபேட்டை, மதனகோபாலபுரத்தில் உள்ள
ஷெரிப் காம்ப்ளக்சில் நடைபெற
உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மட்டுமே கலந்து
கொள்ளமுடியும். குறிப்பாக
கிராமப்புற மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பயிற்சிபெற விரும்புவோர் 18வயது
முதல் 45 வயதிற்கு உட்பட்டவராக, குறைந்தப்பட்சம் 8ம்
வகு ப்பு தேர்ச்சி
பெற்றவராக இருக்க வேண்டும்.

பயிற்சியின் போது காலை, மாலை
தேநீர் மற்றும் காலை,
மதியம் உணவு இலவசமாக
வழங்கப்படும். தினமும்
காலை 9.30 மணி முதல்
மாலை 5 மணி வரை
நடைபெறும் இந்த பயிற்சியின் முடிவில் மத்திய அரசு
சான்றிதழ் வழங்கப்படும்.

தொழில்
தொடங்க கடன் ஆலோசனைகள்
வழங்கப்படும். பயிற்சிக்குத் தேவையான உபகரணங்கள் அனைத்தும்
பயிற்சியின் போது இலவசமாக
வழங்கப்படும். இந்த
பயிற்சியில் சேர விரும்புவோர் வருகிற பிப்.9ம்
தேதி காலை 9 மணி
முதல் மாலை 4.30 மணிவரை
டைபெறும் நேர்முகத்
தேர்வில் பங்கேற்க வேண்டும்.

அப்போது
ஆதார் அடையாள அட்டைநகல்,
குடும்ப அட்டை நகல்,
100
நாள் வேலை அட்டை
நகல், 3 பாஸ்போர்ட் அளவு
போட்டோ ஆகியவற்றை கொண்டு
வரவேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular