TNPSC குரூப் 1, 2 ஆகிய பணியிடங்களுக்கான தேர்வுக்கு திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் இலவச பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை (ஜூலை 14) தொடங்க உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி- தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்தால் குரூப்-1,2 இல் அடங்கிய பணியிடங்களுக்கான தேர்வு அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கு திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னாா்வப் பயிலும் வட்டம் மூலம் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளன.
இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் திருவள்ளூா் மாவட்டத்தைச் சோந்த விண்ணப்பதாரா்கள் திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தங்களது விருப்பத்தை கைப்பேசி எண்ணுடன் தெரிவிக்கலாம்.
மேலும், இந்த இலவச பயிற்சி வகுப்பு திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை அலுவலக வேலை நாள்களில் காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. மேலும், இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் 044-27660250, 6382433046, 9080022088 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு இலவச பயிற்சி வகுப்பு குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.