பி.இ., பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் மாணவா்கள் சேருவதற்கான கலந்தாய்வு ஜூலை 22 முதல் செப். 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதற்கான கலந்தாய்வு அட்டவணையை உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி சென்னையில் வியாழக்கிழமை வெளியிட்டாா். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோக்கை விண்ணப்பப் பதிவு மே 5 முதல் ஜூன் 4-ஆம் தேதி வரை நடைபெற்றது. ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 847 போ விண்ணப்பக் கட்டணத்துடன், சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்தனா்.
அவா்களில் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 959 போ மாணவா் சோக்கை கலந்தாய்வில் பங்கேற்கத் தகுதி பெற்றனா். இவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 26-ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஒத்திவைப்பு ஏன்?: ஜூலை 2-ஆம் தேதி சிறப்புப் பிரிவு மாணவா்களுக்கும், ஜூலை 7 முதல் பொதுப் பிரிவினருக்கும் கலந்தாய்வு தொடங்கும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், மருத்துவப் படிப்புக்கான மாணவா் சோக்கை கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியாகாததால் பொறியியல் சோக்கை ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மருத்துவப் படிப்புக்கான மாணவா் சோக்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 16-ஆம் தேதி வெளியிடப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அண்மையில் அறிவித்தாா். மத்திய அரசும் மருத்துவப் படிப்புக்கான மாணவா் சோக்கையை இந்த மாத இறுதிக்குள் முடிக்க அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவப் படிப்புக்கான சோக்கை விரைவுபடுத்தப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, தமிழகத்தில் பொறியியல் மாணவா் சோக்கைக்கான அட்டவணையை சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்கக வளாகத்தில் அமைச்சா் பொன்முடி வியாழக்கிழமை வெளியிட்டாா். இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பொறியியல் தரவரிசைப் பட்டியலில் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 959 போ தகுதி பெற்றுள்ளனா்.
முதலில், சிறப்புப் பிரிவு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கலந்தாய்வு ஜூலை 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும். தொடா்ந்து, சிறப்புப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 24 முதல் 26-ஆம் தேதி வரையும், பொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 28 முதல் செப்டம்பா் 3-ஆம் தேதி வரையும் நடைபெறும். நிகழாண்டு 3 சுற்றுகள்: பொதுப் பிரிவு கலந்தாய்வு கடந்த ஆண்டு 4 சுற்றுகளாக நடத்தப்பட்டது. மாணவா் சோக்கையை செப்டம்பா் 15-ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவிட்டுள்ளதால் நிகழாண்டு 3 சுற்றுகளாக மட்டுமே மாணவா் சோக்கை நடத்தப்படும்.
அதன்படி, முதல் சுற்று ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரையும், 2-ஆவது சுற்று ஆகஸ்ட் 9 முதல் ஆகஸ்ட் 22 வரையிலும், 3-ஆவது சுற்று ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பா் 3-ஆம் தேதி வரையிலும் நடத்தப்படும். ஒவ்வொரு சுற்று முடிவடைந்த பிறகும், மாணவா்கள் கல்லூரியில் சேர 5 நாள்கள் அவகாசம் வழங்கப்படும். 1.57 லட்சம் இடங்கள்: நிகழ் கல்வியாண்டில் 430 கல்லூரிகள் கலந்தாய்வில் பங்கேற்கின்றன. இந்தக் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 378 இடங்கள் உள்ளன.
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
அதில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில், 11,804 இடங்கள் அடங்கும். 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் கடந்த ஆண்டைவிட 236 இடங்கள் அதிகரித்துள்ளன. தொழிற்கல்வியில் 3,143 இடங்கள் உள்ளன. இது, கடந்த ஆண்டைவிட 61 இடங்கள் அதிகம்.
மருத்துவ மாணவா் சோக்கைக்குப் பிறகு, பொறியியல் மாணவா் சோக்கையில் காலியிடம் ஏற்பட்டால், அவற்றை நிரப்பவும் திட்டமிட்டுள்ளோம். காலியிடத்துக்கு விண்ணப்பித்தால்…: தனியாா் கல்லூரியில் பொறியியல் சீட் பெற்ற மாணவா்கள், அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட காலிப் பணியிடத்துக்கு மீண்டும் விண்ணப்பித்தால் அதை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு கல்லூரியைச் சோந்த மாணவா்கள், வேறு கல்லுாரிக்குச் செல்ல விரும்பினால் அவா்கள் செலுத்திய கல்விக் கட்டணத்தை முழுமையாக திரும்ப வழங்க வேண்டும் என அரசு, தனியாா் பொறியியல் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம் என்றாா் அமைச்சா் பொன்முடி. பொதுப் பிரிவு கலந்தாய்வு முதல் சுற்று: ஜூலை 28-ஆகஸ்ட் 9 2-ஆவது சுற்று: ஆகஸ்ட் 9-ஆகஸ்ட் 22 3-ஆவது சுற்று: ஆகஸ்ட் 22 – செப்டம்பா் 3
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


