தேர்தல் நெருங்குவதால் 777 ஓவர்சீர் பணியிடங்களுக்கு அவசர
தேர்வு திடீர் ரத்து
தமிழக
அரசின் ஊரக வளர்ச்சி
துறையில் காலியாக உள்ள
777 ஓவர்சீயர் பணியிடங்களுக்கான தேர்வுகள்
நாளை பல்வேறு இடங்களில்
நடைபெற இருந்த நிலையில்
அது ரத்து செய்யப்படுவதாக தற்போது அறிவிப்பு வெளியாகி
உள்ளது.
தமிழக
அரசின் பல்வேறு துறைகளில்
உள்ள காலிப்பணியிடங்கள் போட்டித்
தேர்வுகள் வாயிலாக நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில்
ஊரக வளர்ச்சி துறையில்
கட்டடங்கள் கட்டுதல், சாலை
அமைத்தல் மற்றும் பாலம்
கட்டுதல் போன்ற பணிகளை
மேற்பார்வையிடும் பணிக்காக
(ஓவர்சீயர்) 777 காலிப்பணியிடங்கள் இருப்பதாக
அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி
பெறுபவர்கள் நேர்காணல் வாயிலாக
தேர்ந்தெடுக்கப்படுவர்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க சிவில்
இன்ஜினியரிங் பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருந்தால் போதுமானது.
777 காலிப்பணியிடங்களுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்து இருந்த
நிலையில் நாளை எழுத்துத்தேர்வு நடைபெற இருந்தது. சேலம்,
அரியலூர், விழுப்புரம், நீலகிரி,
கரூர், தேனி, திருப்பத்தூர், தஞ்சை, தென்காசி, விழுப்புரம் என 9 மாவட்டங்களில் தேர்வு
மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
இத்தேர்வுகள் நாளை
தொடங்கி பிப்ரவரி 14, 15 மற்றும்
16 ஆகிய தேதிகளில் நடைபெற
இருந்தது.
இந்நிலையில் ஓவர்சீயர் பணியிடத்திற்கான தேர்வு
ரத்து செய்யப்படுவதாக தற்போது
அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நாளை நடைபெற இருந்த
தேர்வு உரிய காரணம்
எதுவும் தெரிவிக்கப்படாமல் ரத்து
செய்யப்பட்டு உள்ளதால்
இதற்கு விண்ணப்பித்தவர்கள் பெரும்
அதிர்ச்சிக்கு உள்ளாகி
உள்ளனர்.
Notification: Click
Here