தமிழக ஊரக
வளர்ச்சித்துறை வரை
தொழில் அலுவலர் காலிப்பணியிடங்கள்–எழுத்துத் தேர்வு ரத்து
சிவகங்கை
மாவட்டத்தில் நாளை
நடைபெற இருந்த வரை
தொழில் அலுவலர் பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வு ரத்து
செய்யப்பட்டுள்ளது. தேர்வு
நடைபெறும் தேதி பின்னர்
அறிவிக்கப்படும் என
சிவகங்கை மாவட்ட ஆட்சியர்
தெரிவித்துள்ளார்.
தமிழக
அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் TNPSC மூலமாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெறும்
இளங்கலை வரை தொழில்
அலுவலர் பணியிடங்களுக்கான காலியிடங்களை நிரப்ப நேரடி பணிநியமனம் முறையில் ஆட்கள் தேர்வு
செய்யப்பட உள்ளனர். சிவகங்கை
மாவட்டம் ஊரக வளர்ச்சி
துறை மற்றும் ஊராட்சி
ஒன்றிய வரை தொழில்
அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு
கடந்த வருடம் வெளியிடப்பட்டன.
இதற்கான
விண்ணப்பங்கள் டிசம்பர்
8 ஆம் தேதி பெறப்பட்டன. விண்ணப்பித்தவர்களின் தகுதி
வாய்ந்தவர்கள் தேர்வு
செய்யப்பட்டு அவர்களுக்கான எழுத்துத்தேர்வு பிப்ரவரி
16ஆம் தேதி நடைபெறும்
என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நாளை நடக்கவிருந்த வரை
தொழில் அலுவலர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வுகள் ரத்து
செய்யப்படுவதாகவும், தேர்வுகள்
நடைபெறும் தேதி பின்னர்
அறிவிக்கப்படும்.