மீனவ பட்டதாரிகளுக்கு இலவச ஐஏஎஸ் பயிற்சி
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள
மீனவ பட்டதாரிகள் அரசு
வழங்கும் இலவச ஐஏஎஸ்
நுழைவு தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று
ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழக
அரசு அனைத்து தரப்பு
மக்களும் அரசின் அனைத்து
துறைகளிலும் பணியாற்ற வேண்டும்
என்பதை நோக்கமாக கொண்டு
செயல்பட்டு வருகிறது. இதற்காக
மத்திய மற்றும் மாநில
அரசுகள் நடத்தும் முக்கிய
நுழைவுத் தேர்வுகளுக்கு அரசு
தரப்பில் இருந்து இலவசமாக
பயிற்சி அளிக்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள
மீனவ பட்டதாரிகள் ஐஏஎஸ்
தேர்வில் கலந்து கொள்ளும்
வகையில் இலவசமாக பயிற்சி
அளிக்கப்படுகிறது. இது
குறித்து ராமநாதபுர ஆட்சியர்
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மீன்வளத்துறை மற்றும் சென்னை அண்ணா
மேலாண்மை பயிற்சி நிலையம்
இணைந்து ஆண்டுதோறும் மீனவ
பட்டதாரி இளைஞர்கள் 20 பேருக்கு
ஐஏஎஸ் போட்டித்தேர்வில் கலந்து
கொள்ள சிறப்பு பயிற்சி
அளித்து வருகின்றது.
கடல்
மற்றும் உள்நாட்டு கூட்டுறவு
சங்க உறுப்பினர்கள் மற்றும்
நல வாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியில் சேர விரும்புவோர் தங்கள்
விண்ணப்பத்தினை www.fisheries.tn.gov.in என்ற
மீன்வளத்துறையின் இணையதள
முகவரியில் பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம்.
ராமநாதபுர
மாவட்ட மீன்வளத்துறையின் இணை
இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை பிப்ரவரி 19ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


