முதலிடம் பெற்ற
மாணவர்களுக்கு தங்கப்பதக்கம்
சென்னை
அண்ணா பல்கலை கீழ்
உள்ள பொறியியல் கல்லூரிகளில் இளநிலை பொறியியல் படிப்புகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்க
உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலை கீழ்
4 வளாக கல்லூரிகள், 16 உறுப்பினர் கல்லூரிகள், 10 அரசு கல்லூரிகள், 3 அரசு உதவி பெறும்
கல்லூரிகள் மற்றும் 500க்கும்
மேற்பட்ட தனியார் பொறியியல்
கல்லூரிகள் உள்ளது.
இந்த
கல்லூரிகளில் முதல்
பருவத்தில் இருந்து சிறப்பாக
செயல்படும் மாணவர்களை பல்கலை
பட்டியல் தயாரித்து தரவரிசை
உருவாக்கும். இதில், ஒவ்வொரு
பாடப்பிரிவு வாரியாக முதல்
இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு பல்கலை தங்கப்பதக்கமும், சான்றிதழும் வழங்கும்.
கடந்த
2016-2020ம் ஆண்டு அண்ணா
பல்கலையில் பயின்ற முதலிடம்
பெற்ற மாணவர்களின் பட்டியலை
கடந்த ஜனவரி மாதம்
பல்கலைக்கழகம் வெளியிட்டது.
வளாக
கல்லூரிகளான கிண்டி பொறியியல்
கல்லூரியில் பயின்ற 13 மாணவர்களுக்கும், அழகப்பா தொழில்நுட்ப கல்லூரியில் 9 மாணவர்களுக்கும், மெட்ராஸ்
தொழில்நுட்ப கல்லூரியில் 9 பேருக்கும் கட்டடவியல் மற்றும் திட்டமிடல் நிறுவனத்தில் பயின்ற
மாணவி ஒருவருக்கும் என
மொத்தம் 32 பேருக்கு பதக்கம்
அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா
பல்கலைக்கழகத்தின் 41வது
பட்டமளிப்பு விழாவின் போது
பதக்கப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவர்களுக்கு சான்றிதழும், தங்கப்பதக்கமும் வழங்கப்படும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


