மினி கிளினிக் பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு நடக்க
உள்ளது
தமிழக
அரசின் புதிய திட்டமான
மினி கிளினிக் திட்டத்திற்கு சிவகங்கை மாவட்டத்துக்கான செவிலியர்
மற்றும் சுகாதார பணியாளர்
காலியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு நடக்க உள்ளது.
தமிழகத்தில் உள்ள கிராமப் புறங்களில் மக்களின் அடிப்படை மருத்துவ
தேவைகளை பூர்த்தி செய்ய
தமிழக அரசு சார்பில்
தமாநிலம் முழுவதும் 2000 மினி
கிளினிக்குகளை துவங்க
அரசு திட்டமிட்டுள்ளது.
மினி
கிளினிக்கில், ஒரு
மருத்துவர், ஒரு செவிலியர்,
ஒரு சுகாதாரப் பணியாளர்
மற்றும் மருத்துவ உபகரணங்கள் போன்றவை இடம் பெற்றிருக்கும்.
கிளினிக்குகள் காலை 9 மணி முதல்
11 வரையும், மாலையில் 4 மணி
முதல் 7 மணி வரையும்
செயல்படும். இங்கு சளி,
காய்ச்சல், தலைவலி, ரத்த
அழுத்தம், சர்க்கரை நோய்
போன்ற நோய்களுக்கும் மருத்துவம் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்திற்கு 36 கிளினிக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில்,
34 கிளினிக்குகள் செயல்பாட்டில் உள்ளது.
சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் பலர்
இப்பணிக்கு விண்ணப்பித்துள்ளனர். Nurse
மற்றும் சுகாதார ஊழியர்களுக்கான நேர்முகத்தேர்வு சிவகங்கை
சுகாதார துணை இயக்குனர்
அலுவலகம் அருகே உள்ள
மருந்து கிடங்கில் நடக்கிறது.
அங்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு நடந்து
வருகின்றது. நேர்முகத்தேர்வுக்கு பின்னர்
இறுதி பட்டியல் தயாரித்து
மாவட்ட ஆட்சியர் மதுசூதனன்
ரெட்டி அவர்கள் பனி
நியமன உத்தரவினை வழங்குவார். இதற்கு பின்னர் மருத்துவர்கள் தேர்வு நடத்தப்படும் என்று
சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


