HomeBlogவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை-மதுரை

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை-மதுரை

 

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகைமதுரை

மதுரை
மாவட்டத்தில் உள்ள
வேலைவாய்ப்பு மையத்தில்
பதிவு செய்து ஐந்து
ஆண்டுகள் நிறைவு பெற்றவர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகையினை பெற விண்ணப்பிக்கலாம் என்று
மாவட்ட வேலைவாய்ப்பு மைய
துணை இயக்குனர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் மக்கள்
பயனடையும் வகையில் ஒரு
வேலைவாய்ப்பு மையம்
அமைக்கப்பட்டுள்ளது. அங்கு
வேலைவாய்ப்பு முகாம்களை
நடத்துவதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அரசு
வழங்கி வந்தது.

மதுரை
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களின் தகுதியை பதிவு
செய்து ஐந்து ஆண்டுகள்
நிறைவு பெற்ற பத்தாம்
வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள், பொதுப்பிரிவு பதிவுதாரர், 12ம் வகுப்பு மற்றும்
பட்டப் படிப்பு தகுதியில்
உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்
உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியானவர்கள் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வந்து
விண்ணப்பத்தினை பெற்றுக்
கொள்ளலாம். அதிகாரபூர்வ இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க குடும்ப வருமானம் ஆண்டுக்கு
ரூ.72,000/-க்கு
மிகாமல் இருக்க வேண்டும்.

மேலும்
தகவல்களை பெற விரும்பினால் 9898936868 என்ற தொலைபேசி
எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular