ஈரோடு, கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில், பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி ஜூலை 31ம் தேதி முதல் செப்டம்பர் 4ம் தேதி வரை ஒரு மாதத்துக்கு வேலை நாள்களில் நடைபெறவுள்ளது.
இதில், பயிற்சி, சீருடை, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராம பகுதியினர், 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பயிற்சியில் சேரலாம்.
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், ஈரோடு, கொல்லம்பாளையம் பைபாஸ் சாலை, ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலை பள்ளி வளாகம், 2ம் தளத்தில் இயங்கும் கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தை 0424 2400338, 8779323213 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


