HomeBlogவேலைவாய்ப்புடன் கூடிய தொழில் திறன் பயிற்சி

வேலைவாய்ப்புடன் கூடிய தொழில் திறன் பயிற்சி

 

வேலைவாய்ப்புடன் கூடிய
தொழில் திறன் பயிற்சி

மாநில
ஊரக வாழ்வாதார இயக்கம்
சார்பில் அளிக்கப்படும் வேலைவாய்ப்புடன் கூடிய தொழில் திறன்
பயிற்சியில் சேர தகுதியானவா்களைத் தோ்வு செய்வதற்கு ஈரோட்டில் பிப்ரவரி 23ஆம்
தேதி நடைபெறும் முகாமில்
இளைஞா், மகளிர் பங்கேற்கலாம்.

இதுகுறித்து மாவட்ட
ஆட்சியா் வெளியிட்ட செய்தி
குறிப்பு:

இம்முகாம்
பிப்ரவரி 23ஆம் தேதி
காலை 9 மணிக்கு பெருந்துறை சாலை, குமலன் குட்டை
பேருந்து நிறுத்தம் எதிரில்
உள்ள பூமாலை வணிக
வளாகத்தில் உள்ள மகளிர்
திட்ட அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

கணினிப்
பயிற்சி, நா்சிங், மருந்தக
உதவியாளா், அழகுக் கலை
பயிற்சி, தையல் பயிற்சி,
சில்லறை விற்பனை மேலாண்மை,
உணவு, குளிர்பானம் தயாரிப்பு,
கணக்கியல் உதவியாளா், ஆய்வக
உதவியாளா், பொது உதவியாளா்,
காவலாளி, சூரிய தகடு
பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு
பயிற்சி வழங்கப்படும்.

3 முதல்
6
மாதங்கள் வரை பல்வேறு
நிறுவனங்கள் மூலம் இலவசமாக
வழங்கப்படும். ஈரோடு
மாவட்டத்தில் உள்ள
8
முதல் பட்டப்படிப்பு வரை
படித்த 18 முதல் 35 வயதுக்கு
உள்பட்ட இளைஞா்கள், மகளிர்
பங்கேற்று பயிற்சியில் சேரலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular