Monday, August 11, 2025
HomeBlogஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு சென்னையில் தங்கும் வசதி கிடையாது என்ற திடீர்...

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு சென்னையில் தங்கும் வசதி கிடையாது என்ற திடீர் அறிவிப்பால் மாணவர்கள் பாதிப்பு

 

ஐஏஎஸ், ஐபிஎஸ்
தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி
வகுப்பு சென்னையில் தங்கும்
வசதி கிடையாது என்ற
திடீர் அறிவிப்பால் மாணவர்கள்
பாதிப்பு

ஐஏஎஸ்,
ஐபிஎஸ் தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புக்கு சென்னையில் நுழைவு தேர்வு எழுதி
தேர்ச்சி பெற்றவர்களுக்கு தங்கும்
வசதி கிடையாது என்ற
திடீர் அறிவிப்பால் மாணவர்கள்
கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

மத்திய
அரசு பணியாளர் தேர்வாணையம் வருகிற ஜூன் 27ம்
தேதி ஐஏஎஸ், ஐபிஎஸ்
உள்ளிட்ட குடிமைப்பணிக்கான முதல்நிலை
தேர்வை நடத்துகிறது.

தேர்வுக்கு தமிழக அரசின் அகில
இந்திய குடிமைப்பணி தேர்வு
பயிற்சி மையம் கட்டணமில்லா பயிற்சி வகுப்பை நடத்த
உள்ளது. அதாவது இந்த
பயிற்சி மையத்தில் கட்டணமில்லா பயிற்சி, கட்டணமில்லா தங்கும்
வசதி, உணவு மற்றும்
நூலகம், வகுப்பறை வசதிகள்
செய்தி கொடுக்கப்படும். இந்த
பயிற்சியை பெற நுழைவு
தேர்வு எழுத வேண்டும்.

அதில்
தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மட்டும் பயிற்சி வகுப்பில்
பங்கேற்க முடியும். மொத்தம்
225
முழு நேர தேர்வர்களுக்கும், 100 பகுதி நேர
தேர்வர்கள் பயிற்சிக்காக அனுமதிப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இலவச
பயிற்சிக்கான நுழைவு
தேர்வு தமிழகம் முழுவதும்
உள்ள 13 இடங்களில் கடந்த
மாதம் 24ம் தேதி
நடைபெற்றது. சென்னையில் மட்டும்
5
தேர்வு மையங்களில் இந்த
தேர்வு நடைபெற்றது. சுமார்
4
ஆயிரம் பேர் இந்த
தேர்வை எழுதினர். நுழைவு
தேர்வுக்கான ரிசல்ட் கடந்த
18
ம் தேதி வெளியிடப்பட்டது.

அதில்
அதிர்ச்சி தான் காத்திருந்தது. அதாவது, சென்னை தேர்வு
மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அனைவரும் தங்கும் வசதியற்ற
பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால்,
சென்னையில் தேர்வு எழுதியவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் தேர்வு எழுதியவர்கள் முக்கால்வாசி பேர் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள். அவர்கள்
சென்னையில் வாடகைக்கு வீடு
எடுத்தும், மேன்சனில் தங்கியும்
டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி
தேர்வுகளுக்கு தயாராகி
வருபவர்கள் ஆவர். மேலும்
இப்பயிற்சி மையத்தில் தங்கும்
வசதியை பெரிதும் நம்பி
தேர்வு எழுதியவர்கள் ஆவர்.

இது
குறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறியதாவது:

அரசின்
பயிற்சி மையம் சார்பில்
225
முழு நேர தேர்வர்களும், 100 பகுதி நேர
தேர்வர்களுக்கும் பயிற்சி
அளிக்கப்படும் என்று
அறிவிக்கப்பட்டது. ஆனால்,
இது திடீரென 140 முழு
நேர தங்கும் வசதி,
85
முழு நேரம் தங்கும்
தங்கும் வசதி இல்லை
என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் 225 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளனர். இதில் சென்னையில் தேர்வு
எழுதிய அனைவரும் தங்கும்
வசதியற்ற பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த பிரிவில்
சேர்க்கப்பட்ட யாருமே
சென்னைவாசிகள் கிடையாது.

அனைவரும்
வெளியூரை சேர்ந்தவர்கள். பயிற்சி
மையத்தின் இந்த முடிவு
அபத்தானதாகும். தேர்வுக்கு பதிவு செய்யும் போதே
இருப்பிடச்சான்றிதழ் அளித்துள்ளோம். அதை பொறுத்து வகைப்படுத்தாமல் தேர்வு மையத்தை வைத்து
வகைப்படுத்துவது எந்த
வகையில் நியாயம். இது
குறித்து நிர்வாகத்திடம் கேட்டால்
முறையாக எந்த பதிலையும்
சொல்வதில்லை. இதனால், தேர்வு
எழுதிய மாணவர்கள் என்ன
செய்வது என்று தெரியாமல்
இருந்து வருகின்றனர். எனவே,
தேர்வு முடிவுகளை உடனடியாக
தகுதி அடிப்படையில் வெளியிட
வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments