TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இந்திய, வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் இரட்டைப்
பட்டங்கள் பெறும் திட்டம்–அறிவிப்பு
விரைவில் வெளியாகிறது
இரட்டை
அல்லது கூட்டுப் பட்டப்
படிப்புகளை வழங்கும் இந்திய,
சா்வதேச உயா்கல்வி நிறுவனங்களுக்கான விதிமுறைகள் அடங்கிய
வரைவு அறிக்கையை UGC
இறுதி செய்துள்ளது.
எனினும்
மக்களின் கருத்துக் கேட்புக்காக வைக்கப்பட்டுள்ள இந்த
வரைவறிக்கை மீதான இறுதி
முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
UGC
(கூட்டுப் பட்டம், இரட்டைப்
பட்டங்களை வழங்கும் இந்திய
மற்றும் வெளிநாட்டு உயா்
கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான
கல்வி புரிந்துணா்வு) விதிமுறைகள், 2021 வரைவறிக்கையின்படி, இந்திய
உயா் கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டுக் கல்வி
நிறுவனங்களுடன் இணைந்து
நிறுவன அங்கீகாரம், பரிமாற்றம் மற்றும் கூட்டுப் பட்டப்
படிப்புகளை வழங்குதல் ஆகியவற்றை
மேற்கொள்ளலாம். எனினும்
ஆன்லைன் மற்றும் திறந்தநிலை, தொலைதூர வழிக் கற்றலுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தாது.
3.01 தரத்துடன்
‘நாக்’ என அழைக்கப்படும் தேசியத் தர மதிப்பீட்டு கவுன்சில் அங்கீகாரம் பெற்ற
இந்தியக் கல்வி நிறுவனங்கள் அல்லது தேசிய நிறுவன
தரவரிசை கட்டமைப்பின் (என்ஐஆா்எஃப்) தலைசிறந்த முதல் 100 பல்கலைக்கழகங்களில் இடம்பிடித்துள்ள இந்தியக்
கல்வி நிறுவனங்கள் அல்லது
உயா் சிறப்பு அந்தஸ்து
பெற்ற கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டுக் கல்வி
நிறுவனங்களுடன் இணைந்து
பட்டப் படிப்புகளை வழங்கலாம்.
எனினும் பிற கல்வி
நிறுவனங்கள் UGCயிடம்
அனுமதி பெற வேண்டும்
என வரைவறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
படிப்பை முறையாக முடித்தவுடன் இரட்டைப் பட்டப் படிப்புகளை வழங்கும் இந்திய மற்றும்
வெளிநாட்டு உயா் கல்வி
நிறுவனங்கள் மூலம் தனித்தனியாகவும் ஒரே நேரத்திலும் பட்டங்கள்
வழங்கப்படும். கூட்டுப்
படிப்பு ஒரே சான்றிதழாக வழங்கப்படும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மக்களின் கருத்துக் கேட்புக்காக வைக்கப்பட்டுள்ள இந்த
வரைவறிக்கை மீதான இறுதி
முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று UGC தெரிவித்துள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


