HomeBlogதமிழக பள்ளிகளில் சனிக்கிழமை வேலை நாள் ரத்து
- Advertisment -

தமிழக பள்ளிகளில் சனிக்கிழமை வேலை நாள் ரத்து

 

Saturday working day canceled in Tamil Nadu schools

தமிழக பள்ளிகளில் சனிக்கிழமை வேலை நாள்
ரத்து

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தற்போது
நடைமுறையில் இருக்கும் வாரத்தில்
ஆறு வேலை நாட்கள்
முறையை மாணவர்கள் மற்றும்
ஆசிரியர்களின் நலன்
கருதி ரத்து செய்ய
வேண்டும் என்று ஆசிரியர்கள் கழகத்தின் கூட்டத்தில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக
கடந்த மார்ச் மாதம்
முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கான பாடங்கள்
ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. மேலும் உயர்வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடத்த
வேண்டிய காரணத்தாலும், தொற்றின்
தாக்கம் சற்று குறைந்து
உள்ளதாலும் கடந்த ஜனவரி
மாதம் 19ம் தேதி
முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்படுகிறது.

இந்நிலையில் தமிழக அரசு 12ம்
வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை மே மாதம் நடத்த
உள்ளதாக அறிவித்து அட்டவணையை
வெளியிட்டுள்ளது. இதனை
தொடர்ந்து 11 மற்றும் 10ம்
வகுப்பு பொதுத் தேர்வுகளும் நடத்தப்படும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மாணவர்களுக்கு நடத்தப்பட
வேண்டிய பாடங்கள் இன்னும்
முழுமையாக நடத்தி முடிக்காமல் உள்ளதால் தேர்வு வரை
பள்ளிகள் அனைத்தையும் வாரத்தில்
ஆறு நாட்கள் செயல்பட
வேண்டும் என்று தமிழக
அரசு உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூரில் மாவட்ட தமிழ்நாடு முதுநிலை
பட்டதாரி ஆசிரியர் கழகத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று
நடந்தது. கூட்டத்தில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து
செய்ய வேண்டும். போட்டித்தேர்வுக்கான வயது வரம்பை
தளர்வு செய்ய வேண்டும்.
மத்திய அரசின் அகவிலைப்படியை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலன்
கருதி சனிக்கிழமை வேலை
நாளை ரத்து செய்ய
வேண்டும் என்பது போன்ற
முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -