அடுமனை பட்டயப்
பயிற்சி
பெங்களூரில் மார்ச்.1-ஆம் தேதி
அடுமனை பட்டயப் பயிற்சி
வழங்கப்படுகிறது.
இதுகுறித்து பேக்கிங் அண்ட் கேக் ஆா்ட் இன்ஸ்டிடியூட் வெளியிட்ட அறிக்கை:
பேக்கிங்
அண்ட் கேக் ஆா்ட்
இன்ஸ்டிடியூட் சார்பில்
மார்ச். 1-ஆம் தேதி
பெங்களூரில் அடுமனை பட்டயப்
பயிற்சி வழங்கப்படுகிறது. வணிக
ரீதியாக அடுமனைக்கலையை தொழில்நுட்ப நோக்கில் மேம்படுத்திக்கொள்வதற்கு இந்த
பயிற்சி பயனளிக்கக்கூடியதாகும்.
இந்த
பயிற்சி வகுப்புகளின்போது அடுமனை
குறித்து வல்லுநா்களின் உரை,
வணிகரீதியாக செய்முறை, நேரடியாக
கற்க பயிலரங்கம், படைப்பாக்கத்தை ஊக்குவிக்கும் கலைகள்,
சுகாதாரத்துக்கு தீங்கிழைக்காமல் அடுமனை உணவுப்பொருள்கள் தயாரிப்பு
குறித்து கற்றுத்தரப்படுகிறது. இந்த
பயிற்சியில் சோ்ந்து படிக்க
முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
மேலும்
விவரங்களுக்கு 7483161453 என்ற
செல்லிடப்பேசி மற்றும்
இணையதளத்தில் தெரிந்து
கொள்ளலாம்.