TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
முதுகலை பட்டதாரி
ஆசிரியர் தேர்வை தொடர்ந்து
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கும் வயது வரம்பு நிர்ணயம்:
பள்ளிக்கல்வித் துறை
முடிவால் தேர்வர்கள் அதிர்ச்சி
முதுகலை
பட்டதாரி ஆசிரியர் தேர்வைத்
தொடர்ந்து ஆசிரியர் தகுதித்
தேர்வுக்கும் (TET)
வயதுவரம்பு கட்டுப்பாடு கொண்டுவர
பள்ளிக்கல்வித் துறை
முடிவு செய்துள்ளது. இதனால்
தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் ஆசிரியர் பணிகளுக்கான போட்டித்
தேர்வு எழுத இதுவரை
வயது வரம்பு ஏதும்
இல்லாமல் இருந்து வந்தது.
உரிய கல்வித்தகுதியுடன் 57 வயது
உள்ளவர்கள் கூட தேர்வு
எழுத முடியும்.
இந்த
நிலையில், முதல்முறையாக முதுகலை
பட்டதாரி ஆசிரியர்பணிக்கு அண்மையில்
வயது வரம்பு கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. அதன்படி
பொதுப்பிரிவினருக்கு 40 மற்றும்
SC, ST, BC,
BC– Muslim, MBC
வகுப்பினருக்கும் பொதுப்பிரிவு உட்பட அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பில் 5 ஆண்டு
தளர்வு அளிக்கப்பட்டது.
இதற்கு
பிஎட் முடித்த முதுகலை
பட்டதாரிகள் உட்பட ஆசிரியர்
சங்கங்களும் அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதையடுத்து வயது வரம்பைநீக்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என
பள்ளிக்கல்வித் துறைஅமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
இதனிடையே
முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான ஆன்லைன் பதிவு மார்ச்
1 முதல் தொடங்கவுள்ளது. இதனால்
வயது வரம்பு குறித்தபுதிய அறிவிப்பின்படி நடைமுறைப்படுத்தப்படுமா அல்லது அமைச்சரின் வாக்குறுதியின்பேரில் தளர்த்தப்படுமா என்று முதுகலை பட்டதாரிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மேலும்
இந்தத் தேர்வுக்காகஏற்கெனவே தனியார்
பயிற்சி மையங்களில் சேர்ந்தவர்கள் பயிற்சியை தொடர்வதா வேண்டாமா
என்று குழம்பிப் போயுள்ளனர்.
இதனிடையே
மத்திய அரசின் இலவச
கட்டாய கல்வி உரிமைச்
சட்டத்தின்படி இடைநிலை
ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்
பணிகளுக்கு ஆசிரியர் தகுதித்
தேர்வு(TET) கட்டாயமாகும். இந்த தேர்வுக்கு வயது
வரம்பு ஏதும் இல்லை.தற்போது
இதற்கும் வயது கட்டுப்பாடு கொண்டுவர பள்ளிக்கல்வித் துறை
முடிவுசெய்துள்ளது.
அதன்படி,
பொதுப் பிரிவினருக்கு 40 ஆகவும்
இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45 ஆகவும் வயது வரம்பு
நிர்ணயிக்கப்படும் எனத்
தெரிகிறது. இதனால் 40 மற்றும்
45வயது கடந்த இடைநிலை
ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி
ஆசிரியர்களாலும் டெட்
தேர்வில் தேர்ச்சிபெற்ற 40 வயதை
கடந்தவர்களாலும் இனி
அரசுப் பள்ளிகளில் பணிக்கு
சேர முடியாது.
அதேநேரம்
மத்திய அரசுபள்ளிகளில் பணியில்
சேர்வதற்காக எழுதப்படும் மத்திய
ஆசிரியர்தகுதித் தேர்வுக்கு (C–TET) எவ்வித
வயது வரம்பு கட்டுப்பாடும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


