HomeBlogதமிழகத்தில் திறக்கப்படாத நடுநிலை பள்ளிகள் – PTA இணைப்பு கட்டணம் செலுத்த உத்தரவு

தமிழகத்தில் திறக்கப்படாத நடுநிலை பள்ளிகள் – PTA இணைப்பு கட்டணம் செலுத்த உத்தரவு

 

தமிழகத்தில் திறக்கப்படாத நடுநிலை பள்ளிகள் – PTA இணைப்பு
கட்டணம் செலுத்த உத்தரவு

கொரோனா
ஊரடங்கு காரணமாக மாநிலத்தில் உள்ள தொடக்க மற்றும்
நடுநிலை பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் மாநில பெற்றோர்
ஆசிரியர் கழகத்திற்கான (PTA) இணைப்பு
கட்டணத்தை பள்ளிகள் செலுத்த
உத்தரவிடப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் ஆசிரியர்களும் தமிழ்நாடு
பெற்றோர் ஆசிரியர் கழகத்தில்
உறுப்பினராக இணைய வேண்டும்.
இதற்காக ஒவ்வொரு ஆண்டும்
மாணவர்களிடம் இருந்து
PTA
கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கட்டணத்தில் இருந்து
மாநில பெற்றோர் ஆசிரியர்
கழகத்துக்கு ஆண்டு சந்தா
தொகையான இணைப்பு கட்டணத்தை
செலுத்த வேண்டும்.

கொரோனா
தொற்று காரணமாக நடப்பு
ஆண்டில் தொடக்க மற்றும்
நடுநிலை பள்ளிகள் அனைத்தும்
திறக்கப்படவில்லை. உயர்நிலை
மற்றும் மேல்நிலை பள்ளிகளில் மாணவர்கள் பள்ளிக்கு வந்தாலும்
அவர்களிடம் PTA
கட்டணம் வசூலிக்கப்படவில்லை.

இந்நிலையில் கல்வித்துறை 2020- 2021ஆம்
கல்வி ஆண்டுக்கு தொடக்க
பள்ளிக்கு ரூ.210ம்,
நடுநிலை பள்ளிக்கு ரூ.
285
ம், உயர்நிலை பள்ளிக்கு
ரூ.860ம், மேல்நிலைப்பள்ளிக்கு ரூ. 1260ம்,
இணைப்பு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு மார்ச் 1ஆம்
தேதிக்குள் செலுத்த உத்தரவிட்டுள்ளது.

மாநிலம்
முழுவதும் உள்ள பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கான கட்டணம் வசூலிக்கப்பட்டு, தூய்மை
மற்றும் வாட்ச்மேன் சம்பளம்
உள்ளிட்டவை வழங்கப்படும். நடப்பாண்டில் இதுவரை இணைப்பு கட்டணம்
வசூலிக்கவில்லை. ஆனால்
உரிய நேரத்தில் செலுத்த
உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா
பரவலினால் மாணவர்களின் நலனை
கருத்தில் கொண்டு நடப்பு
ஆண்டு கட்டணத்தை ரத்து
செய்ய வேண்டும் என்று
ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular