TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
தமிழக மின்வாரியத்தில் 2900 காலிப்பணியிடங்கள் – ஏப்ரல்
மாதம் உடற்தகுதித் தேர்வு
தமிழக
மின்சார வாரியத்தில் காலியாக
உள்ள 2900 கள பணியாளர்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கான உடற்தகுதி
தேர்வு வரும் ஏப்ரலில்
நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக
மின்சார வாரியத்தில் காலியாக
உள்ள கள பணியாளர்கள் பணியிட தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக பிப்ரவரி
மாதம் 15 ஆம் தேதி
முதல் மார்ச் மாதம்
16 தேதி வரை பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அவர்களுக்கான உடற்தகுதி தேர்வு ஏப்ரல்
மாதம் முதல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
இந்த பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நடத்தப்படாமல் நேரடியாக
விண்ணப்பித்தவர்களுக்கு உடற்தகுதி
தேர்வுகள் நடத்தப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்களில் தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்த அனுமதி
கடிதம் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இதுகுறித்த கூடுதல் விவரங்கள்
அறிய www.tangedco.gov.in
என்ற இணையதளம் மூலம்
தெரிந்து கொள்ளலாம்.
ஏற்கனவே
மின்சார வாரியத்தில் காலியாக
உள்ள கேங்மேன் பணியிடங்களுக்கான அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் 9613 பேருக்கு பணி
நியமனம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
Notification: Click
Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


