HomeBlogநாடு முழுவதும் பொது ஊரடங்கு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பு - மத்திய அரசு...

நாடு முழுவதும் பொது ஊரடங்கு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு

 

நாடு முழுவதும்
பொது ஊரடங்கு மார்ச்
31
ம்
தேதி வரை நீட்டிப்புமத்திய அரசு அறிவிப்பு

CORONA பரவலை தடுக்கும் நோக்கில்
பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு
உத்தரவு நாடு முழுவதும்
மார்ச் 31-ம் தேதி
வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய
உள்துறை அமைச்சகம் அறிவித்து
உள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விதிமுறைகள் அமலில் இருக்கும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CORONA தொற்று பரவல் காரணமாக
கடந்த வருடம் மார்ச்
மாதத்தில் ஊரடங்கு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது. ஆரம்ப
காலத்தில் மிக கடுமையாக
விதிகளுடன் பின்பற்றப்பட்ட ஊரடங்கில்
பின்னர் பல்வேறு தளர்வுகள்
வழங்கப்பட்டன. மேலும்
நோய்த்தொற்று குறைந்ததால் கல்வி நிறுவனங்கள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட பலவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது
கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வரும்
நிலையில், ஊரடங்கு தொடர்ந்து
அமலில் உள்ளது.

பிப்ரவரி
28-
ம் தேதியுடன் ஊரடங்கு
உத்தரவு முடிவுக்கு வர
உள்ள நிலையில், மத்திய
உள்துறை அமைச்சகம் புதிய
அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதன்படி நாடு
முழுவதும் ஊரடங்கு உத்தரவு
மார்ச் 31-ம் தேதி
வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்
மாநிலங்கள் மற்றும் யூனியன்
பிரதேச அரசுகள் கொரோனா
தடுப்பூசி செலுத்தும் பணிகளை
துரிதப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

அதுமட்டுமின்றி கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு தொடர்ந்து
அமலில் இருக்கும் எனவும்,
விதிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த January 27-ம் தேதி வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு மத்திய உள்துறை அமைச்சகம்
தனது உத்தரவில் தெரிவித்து உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular