Sunday, August 10, 2025
HomeBlogபோக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ்

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ்

 

Transport workers' strike called off

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ்

தமிழ்நாட்டில் கடந்த மூன்று நாட்களாக
போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்தி வந்த போராட்டம்
இன்று முடிவுக்கு வந்தது.
இதனை தொழிலாளர் நலத்துறையின் இணை ஆணையர் அறிவித்துள்ளார்.

கடந்த
25-
ஆம் தேதி, ஊதிய
உயர்வு மற்றும் தற்காலிக
பணியாளர்களுக்கு நிரந்தர
பணி வழங்க கோரி
போக்குவரத்து தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்தனர்.
தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களின் 14வது ஊதிய
உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக
அமல்படுத்த வேண்டும், அரசு
போக்குவரத்து துறையில்
உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப
வேண்டும், ஓய்வு பெற்ற
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு உடனடியாக ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்ற
கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த
மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த
வேலை நிறுத்த போராட்டத்தில் தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி,
ஐஎன்டியூசி, எச்எம்எஸ் மற்றும்
இந்து மஸ்தூர் சபா
உள்ளிட்ட ஒன்பது தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு
வந்தனர். மேலும் போக்குவரத்து கழகங்களுக்கு உரிய
நிதியுதவி அளிக்குமாறும் வலியுறுத்தி வந்தனர். தற்போது பணிக்கு
வராமல் வேலை நிறுத்தப்
போராட்டத்தில் ஈடுபடும்
தொழிலாளர்கள் மீது
ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக
போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்தி வந்த போராட்டம்
வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் நலத்துறை
இணை ஆணையர் லட்சுமி
காந்தன் அவர்கள், தொழிலாளர்களோடு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு
ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments