HomeBlogராணுவப் பள்ளியில் இளம் வயதிலேயே சேர்ந்து, தேசப் பணியாற்ற வாய்ப்பு

ராணுவப் பள்ளியில் இளம் வயதிலேயே சேர்ந்து, தேசப் பணியாற்ற வாய்ப்பு

 

ராணுவப் பள்ளியில்
இளம் வயதிலேயே சேர்ந்து,
தேசப் பணியாற்ற வாய்ப்பு

தேசிய
ராணுவப் பள்ளியில் சோ்ந்து
படிக்க விரும்பும் மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து தேசிய
ராணுவப் பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

உத்தா்கண்ட் மாநிலத்தில் டெஹ்ராடூனில் உள்ள
தேசிய ராணுவப் பள்ளிகளில் 2021-2022ஆம் கல்வியாண்டில் 8ஆம் வகுப்புகளில் சோ்ந்து
படிக்க விரும்பும் மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான
நுழைவுத் தோ்வு நாட்டின்
பல்வேறு நகரங்களில் நடக்க
இருக்கின்றன. கா்நாடகத்தைச் சோ்ந்த
மாணவா்களுக்கு 2021 ஜூன்
5
ஆம் தேதி நுழைவுத்
தோ்வு நடக்க இருக்கிறது. அரசு அங்கீகாரம் பெற்ற
பள்ளிகளில் 7ஆம் வகுப்பு
படித்துக் கொண்டிருக்கும் மாணவா்கள்
அல்லது தோ்ச்சி பெற்றவா்கள், 02.07.2006 முதல் 01.01.2008ஆம்
ஆண்டுக்குள் பிறந்தவா்கள் மட்டும்
நுழைவுத்தோ்வு எழுத
தகுதியானவா்கள் ஆவா்.
ராணுவத்தில் சேர மாணவா்களை
தகுதிப்படுத்துவது இப்பள்ளியின்முக்கிய நோக்கமாகும்.

www.rimc.gov.in என்ற இணையதளத்தில் கட்டணம்
செலுத்தி, விண்ணப்பங்களை நிரப்பி
இயக்குநா், முன்னாள் ராணுவ
வீரா் நல்வாழ்வுத் துறை,
பீல்டுமார்ஷல் கே.எம்.காரியப்பா
மாளிகை, கே.எம்.காரியப்பா
சாலை, பெங்களூரு
25
என்ற முகவரியில் April
15
ஆம் தேதிக்குள் செலுத்த
வேண்டும்.

எழுத்துத்
தோ்வு, நோ்காணல், மருத்துவ
தகுதிச்சான்றின் அடிப்படையில் மாணவா்களுக்கு சோ்க்கைப் பட்டியல் தயாரிக்கப்படும். மேலும்
விவரங்களுக்கு 080-25589459 என்ற
தொலைபேசி எண்ணில் அணுகலாம்
என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular